திருப்பம் தரும் திரிபுரநாதேஸ்வரர்
ஜூன் 21,2022,12:10  IST

தென்தமிழகத்தின் பஞ்சபூத தலங்களில் நான்காவது தலம் தென்மலை கோயில். இது வாயு தலமான காளஹஸ்திக்கு நிகரானது. மேற்கு நோக்கிய அதிசயத்தலம் இது. தொழிலில் வளர்ச்சி பெற விரும்புபவர்கள் இக்கோயிலுக்கு வருகை தாருங்கள்! திருப்பத்துடன் திரும்பிச்செல்லுங்கள்!
முன்னொரு காலத்தில் வித்யுன்மாலி, கமலாட்சன், தாரகாட்சன் என்கிற அசுரர்களின் ஆணவத்தை நீக்கி அவர்களுக்கு அருள் புரிந்த சிவபெருமானுக்கு திரிபுரநாதேஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. அவரே இப்பகுதியை ஆண்ட ஜமீன்தார்களுக்கு குல தெய்வமாக விளங்குவதால் திரிபுரநாதேஸ்வரர் கோயிலை அவர்களே பராமரித்து வருகின்றனர். மூலஸ்தானத்தில் உள்ள சுடர்விட்டு பிரகாசிக்கும் விளக்கு எவ்வளவு காற்றடித்து அசைந்தாலும் அணைவது கிடையாது என்பது இக்கோயிலின் தனிச்சிறப்பு. அம்பாளின் திருநாமம் சிவபரிபூரணாம்பிகை. கோயிலுக்கு எதிரே மிகப்பெரிய குளம் உள்ளது. இக்கோயிலில் கன்னிமூலை விநாயகர், முருகன், சனீஸ்வரன், துர்கை, தட்சிணாமூர்த்தி, நடராஜர், சிவகாமியம்மை, சண்டிகேஸ்வரர், காலபைரவர், நவகிரக சன்னதிகளையும் தரிசித்து அருள் பெறலாம். இங்கு திருமலை சித்தர் என்பவர் தங்கி பல திருப்பணிகளை செய்துள்ளார். பக்தர்கள் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் வருகின்றனர். இக்கோயிலுக்கு வருவோருக்குத் திருமணத் தடை விலகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். ராகு, கேது தோஷம் நீங்கும், மறைமுக எதிரி விலகுவர், வீண் போட்டிகள் குறையும். வில்வம் தலவிருட்சமாகவும், சிவகங்கை தீர்த்தமாகவும் உள்ளது.

எப்படி செல்வது : கரிவலம்வந்தநல்லுாரில் இருந்து 6 கி.மீ.,
விசேஷ நாள்: நவராத்திரி, கந்தசஷ்டி, திருவாதிரை, சிவராத்திரி பிரதோஷம், பவுர்ணமி
நேரம்: காலை 7:00 - 10:00 மணி; மாலை 4:00 - 7:00 மணி
தொடர்புக்கு: 96267 77121
அருகிலுள்ள தலம் : நாதகிரி முருகன் கோயில் 8 கி.மீ.,
நேரம் : காலை 7:00 - 1:00 மணி; மாலை 6:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 98650 37632

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X