அமர்கண்ட் நர்மதா தேவி
ஜூன் 21,2022,12:11  IST

புண்ணிய பூமியான அமர்கண்ட் என்னும் இடத்தில் உற்பத்தியாகும் நதிகள் சோனா, நர்மதா. இதில் நர்மதை ஆற்றங்கரையில் பார்வதியும், சிவபெருமானும் பொழுது போக்காக தங்குவதுண்டு. மத்திய பிரதேசம் அனுப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இத்தலத்திற்கு வருவதை வாழ்வில் கிடைத்த பாக்கியமாக பக்தர்கள் கருதுகின்றனர்.
இங்குள்ள மேகமலை அடிவாரக்குளத்தில் இருந்து ஓடை போல நர்மதையின் பயணம் தொடங்குகிறது. பின்னர் மலை மீதிருந்து நீர்வீழ்ச்சியாக விழுந்து 10 கி.மீ., அகலத்திற்கு விரிந்து ஓடுகிறது. நதியின் இருகரைகளிலும் ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட கோயில்கள் பல உள்ளன. இதில் ஓங்காரேஸ்வரர் சிவன் கோயிலில் ஆதிசங்கரர் தன் குருநாதருடன் தங்கிய குகை, மார்க்கண்டேயர், கபீர்தாசர் தவம் செய்த இடங்கள் அவசியம் தரிசிக்க வேண்டியவை. நர்மதையின் உற்பத்தி ஸ்தானம் முதல் நதியை முழுமையாக சுற்றி வருவதை 'நர்மதா பரிக்ரமா' என்கின்றனர்.
பவுர்ணமியன்று நர்மதை நதியைச் சுற்றினால் பாவம் பறந்தோடும்.
அமர்கண்ட் கோயிலின் நுழைவாயில் கோட்டை போல காட்சியளிக்கிறது. ராணி அகல்யாபாய் கட்டிய இக்கோயிலில் மூலவராக சிவன் இருக்கிறார். கோயிலின் தெற்கு பிரகாரத்தில் நர்மதை நதி உற்பத்தியாகும் குளம் உள்ளது. பாவம் தீர பக்தர்கள் தீர்த்தத்தை தெளித்துக் கொள்கின்றனர். நர்மதா தேவிக்கு இரண்டு கோயில்கள் உள்ளன. முதல் கோயிலில் திரிசூலம் தாங்கியபடி முதலை வாகனத்தில் அம்மன் அமர்ந்திருக்கிறாள். இரண்டாவது கோயிலில் எட்டு கைகளுடன் ஒரு குழந்தையை அணைத்தபடி நர்மதாதேவி இருக்கிறாள். கிரகதோஷம் தீர இங்குள்ள யானை சிலையின் கால்களுக்கு இடையில் ஊர்ந்தபடி பக்தர்கள் வணங்குகின்றனர். இங்கு மச்சேந்திரநாத், பாடலீஸ்வரர், கலாசூரி, மகாவிஷ்ணு சன்னதிகள் உள்ளன. மண்டபம் ஒன்று இரண்டு கோயில்களையும் இணைக்கிறது.

எப்படி செல்வது
* அனுப்பூரில் இருந்து 70 கி.மீ.,
* ஜபல்பூரில் இருந்து 224 கி.மீ.,
விசேஷ நாள்: நர்மதா ஜயந்தி, மகாசிவராத்திரி
நேரம்: காலை 6:30 - இரவு 7:30 மணி
அருகிலுள்ள தலம்:
* கபிலர் ஆஸ்ரமம் 6 கி.மீ.,
* சோனாக்சி அம்மன் 1 கி.மீ.,
நேரம் : காலை 6:00 - இரவு 8:00 மணி

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X