நோயின்றி, நீண்ட காலம் வாழ வழிகாட்டுகிறார் அவ்வையார்.
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.
விநாயகரின் திருவடியை பூக்களால் வழிபடுவோருக்கு வாக்கு வன்மை, நல்ல மனம், உடல்நலம், லட்சுமி கடாட்சம் ஏற்படும் என்பது இதன் பொருள். இதற்கு வேறொரு பொருளும் உண்டு.
துளசி, குப்பைமேனி, தும்பை, கரிசலாங்கண்ணி ஆகிய மூலிகைகளை வேருடன் இடித்து சாறு பிழிந்து பனை வெல்லம், தேனுடன் கலந்து சாப்பிட்டால் நோய் அணுகாது. நீண்ட காலம் வாழலாம்.
துப்பு - தேன்
திரு - துளசி
மேனி - குப்பை மேனி
தும்பி - தும்பை
கையான் - கரிசாலை (கரிசலாங்கண்ணி)
பாதம் - மூலம் (வேர்)