புகழின் உச்சிக்கு கொண்டு செல்வார் அபிராமேஸ்வரர்
ஜூன் 27,2022,14:22  IST

பங்காளி சண்டைக்கு தீர்வு, புகழின் உச்சத்திற்கு செல்ல வேண்டுமா வாங்க விழுப்புரம் மாவட்டம் திருவாமாத்துார் அபிராமேஸ்வரர் கோயிலுக்கு.... சுயம்புவாக இருக்கும் சிவபெருமானை பசுக்கள் வழிபட்ட தலம் இது. ஆதலால், இத்தலம் திருஆமாத்துார் என பெயர் பெற்றது. ராமபிரான் இலங்கையிலிருந்து திரும்பும்போது அபிராமேஸ்வரரை வழிபாடு செய்து உள்ளார். தேவி பார்வதியிடம் சாபம் பெற்ற பிருங்கி முனிவர் இங்குதான் சாபம் நீங்கப்பெற்றார். தேவார மூவர், அருணகிரி நாதர், தண்டபாணி சுவாமிகளால் பாடல் பெற்ற தலம்.
முன்னொரு காலத்தில் அண்ணன் ஒருவன் தன் தம்பியை ஏமாற்றிச் சொத்து சேர்த்துக் கொண்டான். உண்மையறிந்த தம்பி சொத்துக்களை கேட்டு அண்ணிடம் சண்டை இட்டான். இதனால் தம்பி பஞ்சாயத்தைக் கூட்டினான். பஞ்சாயத்தார் அம்பாள் கோயிலில் உள்ள வட்டப்பாறையில் அண்ணனை சத்தியம் செய்து தருமாறு கூறினர்.
இதற்காக சூழ்ச்சியில் இறங்கி அவன், தம்பியின் சொத்தை விற்று அதில் தங்கம் வாங்கி அதை கைத்தடியில் மறைத்து வைத்தான். அத்தடியுடன் பஞ்சாயத்திற்கு வந்து, தம்பியிடம் அதைத் தந்துவிட்டு, தன்னிடம் சொத்துகள் ஏதுமில்லை என்றும், எல்லாம் அவனிடமே உள்ளது என்று சத்தியம் செய்தான். அனைவரும் வழியின்றி கலைந்து சென்றனர். தம்பியிடம் தன் கைத்தடியை பெற்றுக் கொண்ட அண்ணன், வீட்டிற்கு செல்லும் போது அம்மனின் சக்தி தன்னை ஒன்றும் செய்யவில்லை என்று இறுமாப்புடன் நடந்தான். அப்போது அண்ணனை பாம்பு ஒன்று தீண்டியது. இந்நிகழ்ச்சியை எல்லோரும் அறிந்து கொள்ளும் வகையில் இன்றும் முத்தாம்பிகை அம்பாளின் மார்பில் பாம்பின் வால் சிற்பம் உள்ளது.

எப்படி செல்வது: விழுப்புரத்திலிருந்து 26 கி.மீ.,
விசேஷ நாள்: நவராத்திரி, சிவராத்திரி
நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 4:30 - 8:30 மணி
தொடர்புக்கு: 98430 66252, 98420 22544
அருகிலுள்ள தலம்: தும்பூர் நாககன்னியம்மன் கோயில் 9 கி.மீ.,
நேரம்: காலை 7:00 - இரவு 7:00 மணி
தொடர்புக்கு: 90940 61721

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X