சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்
ஜூன் 27,2022,14:26  IST

* பூஜையறையில் வேல் வைத்து, அதற்கு கார்த்திகை தோறும் பால் அபிஷேகம் செய்பவருக்கு பணியிடத்தில் உள்ள அவரது பிரச்னை தீரும்.
* பணம், புகழை பெறுவதற்காக துாக்கம், உணவை அலட்சியப்படுத்தாதீர். உடல் நலனில் அக்கறை கொள்வதும் ஆன்மிகமே!
* ஆகாயத்தில் பறவைகளும், நீரில் மீன்களும் சென்ற வழி நமக்கு தெரியாது. அதுபோலவே ஒருவர் செய்யும் தர்மமும் வெளியே தெரியாமல் இருப்பது நல்லது.
* பிறர் நன்றாக இருக்க வேண்டும் என நினைத்தாலே மகாலட்சுமியின் அருள் கிடைத்துவிடும்.
* கோயில் பிரகாரத்தை வேகமாகவும், பிறருடன் பேசியபடியும் வலம் வரக்கூடாது.
* மனைவி கர்ப்பமாக இருக்கும்போது கணவன் பிறரிடம் இருந்து தானம் வாங்கக்கூடாது.
* தானம் வாங்கிய பொருளை நல்வழியில் பயன்படுத்துங்கள். அப்போதுதான் தானம் வாங்கிய பாவம் உங்களை விட்டு நீங்கும்.
* பெரியவர்களின் காலை தொட்டு, அவர்களிடம் ஆசி வாங்குவோரின் சக்தி அதிகரிக்கும்.
* தெற்கு பார்த்தபடி அமர்ந்து பூஜை செய்யாதீர்கள்.
* வீடு தேடி வந்தோருக்கு உணவு கொடுங்கள். அதுதான் நீங்கள் தேடிய புண்ணியங்களை காக்கும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X