* 'ரங்கா.. ரங்கா...' என யார் ஒருவர் சொல்கிறாரோ, அவர் செய்த பாவங்கள் பறந்தோடும்.
* திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதர் கோயில் 'மோட்சம் தரும் தலம்'. இவரை ஒருமுறையாவது தரிசியுங்கள்.
* பாற்கடலில் பள்ளி கொண்ட கோலத்தில் இங்கு காட்சி தருகிறார் ரங்கநாதர்.
* இத்தலத்தில் தங்கி, ரங்கநாதருக்கு சேவை செய்த ராமானுஜர் இங்கேயே மோட்சம் அடைந்தார்.
* யாருக்கும் தீங்கு செய்ய மாட்டேன் என சங்கல்பம் செய்து கொண்டு, இவரை நினையுங்கள். உங்களின் கர்மவினை தீரும்.
* இங்குள்ள உயரமான ராஜகோபுரம் இந்தியாவின் பெரிய கோபுரமாகும்.