* நடந்து முடிந்ததை பற்றி சிந்திக்காதே. நடக்க இருப்பதை பற்றி யோசி. எதிர்காலம் சிறக்கும்.
* எந்த ஏற்றத்துக்கும் ஒரு இறக்கம் உண்டு. எந்த முயற்சிக்கும் ஒரு பலன் உண்டு.
* மனதில் நேர்மையும், தைரியமும் இருந்தால் நடக்கும் பாதையும் நேரானதாகவே இருக்கும்.
* துன்பம் நேரும்போது சிரித்தால், அதுவே வாளாகி அத்துன்பத்தை வெட்டும்.
* பிறரை ஏமாற்றாமல் இரு. கடவுளின் பார்வை உன் மீது விழும்.
* யாரையும் வெற்றுக் காகிதமாக நினைக்காதே. ஒருநாள் அவர்கள் பட்டமாய்ப் பறப்பார்கள்.
* எடுத்ததற்கு எல்லாம் கவலைப்பட்டு காலத்தை வீணாக்காதே.
* உற்சாகமாக இரு. உடம்பிலே தெம்பு உண்டாகும்.
* எந்தவொரு செயலையும் உடனுக்குடன் செய்து முடிப்பது நல்லது.
* யார் மனதில் நம்பிக்கை உண்டாகிறதோ... அவர் வெற்றி பெறுவது உறுதி.
* தர்மத்தால் பெறும் வெற்றியே நிலையானது.
* கொள்கையில் மட்டும் அன்பு இருந்தால் போதாது. செயலில் இருக்க வேண்டும்.
* துணிவுதான் தாயாக உள்ளது. அதிலிருந்தே நன்மைகள் பிறக்கின்றன.
* அறியாமைதான் எல்லா துன்பத்திற்கும் காரணம்.
* அதர்மத்தை தர்மத்தாலும், தீமையை நன்மையாலும் வெல்ல முடியும்.
சொல்கிறார் பாரதியார்