ஜூன் 24, ஆனி 10: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல், ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி தங்கப்பல்லக்கு, திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகனம்.
ஜூன் 25, ஆனி 11 : கூர்ம ஜயந்தி, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வரதராஜ மூலவர் திருமஞ்சனம், திருப்பதி ஏழுமலையப்பன் சமஸ்தான மண்டபத்திற்கு எழுந்தருளல். குச்சனுார் சனி பகவான் சிறப்பு அபிஷேகம்.
ஜூன் 26, ஆனி 12: பிரதோஷம், கீழ்த்திருப்பதி கோவிந்த ராஜப்பெருமாள் கோயிலில் அனுமன் திருமஞ்சனம்
ஜூன் 27, ஆனி 13: சுபமுகூர்த்த நாள், சிதம்பரம், ஆவுடையார்கோவில் தலங்களில் சிவபெருமான் உற்ஸவம், சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம். மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு.
ஜூன் 28,ஆனி 14: திருவள்ளூர் வீரராகவர் தெப்பம், திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் வீபிஷண ஆழ்வாருக்கு நடையழகு சேவை. சுவாமிமலை முருகப்பெருமான் தங்கப்பூமாலை சூடியருளல்.
ஜூன் 29, ஆனி 15: ஸ்ரீவில்லிபுத்துார் பெரியாழ்வார், கண்டனுார் மீனாட்சி உற்ஸவம் ஆரம்பம், அஹோபில மடம் 9வது பட்டம் அழகிய சிங்கர் நட்சத்திரம், சிதம்பரம் சிவபெருமான் புறப்பாடு.
ஜூன் 30, ஆனி 16: அமிர்த லட்சுமி விரதம், ராமநாதபுரம் கோதண்டராமர் பவனி, ஆவுடையார் கோவில் சிவபெருமான் புறப்பாடு, திருவள்ளூர் வீரராகவர் தெப்பம். சுவாமிமலை முருகன் வைரவேல் தரிசனம்.