பழைய நிலையை மறக்காதீர்!
ஜூலை 19,2022,08:47  IST

இஸ்ரேல் நாட்டின் முதல் பிரதமராக இருந்தவர்தான் டேவிட் பென் குரியன். இவர் நாடாளுமன்றத்திற்கு வரும்போதெல்லாம் சூட்கேஸ் ஒன்றையும் கொண்டுவருவார். இதனால் இவர் விமர்சனத்திற்கு உள்ளானார். விலை உயர்ந்த பொருளை சூட்கேஸிற்குள் வைத்துள்ளார் என எதிர்கட்சியினர் சந்தேகித்தனர். ஒருநாள் இதற்காக அமளியிலும் ஈடுபட்டனர். வேறு வழியில்லாமல் அவரும் திறந்து காண்பித்தார். அனைவரும் ஆச்சர்யம் அடைந்தனர். காரணம் அதற்குள் உடைந்து போன கம்பும், பழைய மேலாடையும் இருந்தது.
'இத்தனை நாளாக இதைத்தான் கொண்டு வந்தீர்களா. இதற்கு காரணம் என்ன' என பலரும் கேட்டனர்.
'சிறு வயதில் நான் ஆடுகளை மேய்த்தேன். ஆண்டவரின் அருளால் இந்த உயர்வை எட்டியுள்ளேன். எனது பழைய நிலையை மறக்ககூடாது என்பதால்தான் இதை கொண்டு வருகிறேன்' என்றார். பூர்வ நாட்களை நினை;
தலைமுறை தலைமுறையாய்ச் சென்ற வருஷங்களை கவனித்துப்பார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X