முதலை காவல் காக்கும் கோயில்
ஜூலை 26,2022,10:27  IST

எறும்பு முதல் யானை வரையிலான உயிரினங்கள் கடவுளை வழிபாடு செய்துள்ளது. தற்காலத்தில் முதலை வழிபட்டு, காவல் காக்கும் பெருமாள் கோயில் ஒன்று கேரளாவில் உள்ளது வாங்க அங்கு செல்வோம்.
முன்னொரு காலத்தில் “வில்வமங்கலம்” என்ற முனிவர் மக்கள் நலனுக்காக விஷ்ணுவை நோக்கி தவம் செய்தார். அவருக்கு அந்தணச்சிறுவன் வடிவில் காட்சி தந்து வரங்கள் வழங்கினார். பின்பு இங்குள்ள குளத்தின் அருகிலுள்ள குகையில் சென்று மறைந்தார். அவ்விடத்தை அவரது கட்டளைப்படி வேறு யாரும் செல்லாதவாறு அன்று முதல் முதலை காவல் காக்கிறது என கூறுகின்றனர்.
கேரளா காசர்கோடு மாவட்டம் கும்பாலா அருகில் உள்ள அனந்தபுரி கோயில். இக்கோயில் ஒன்றே கேரளாவில் ஏரியின் நடுவே அமைந்த கோயிலாகும். ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோயிலின் கருவறையில் உள்ள விக்கிரகம் கல், உலோகத்தால் ஆனவையல்ல. 70க்கும் மேற்பட்ட மருத்துவ பொருட்களால் உருவான மகாவிஷ்ணு அனந்த சயனத்தில் காட்சி தருகிறார். கோயிலில் மர வேலைப்பாடுகளுடன் கூடிய மேற்கூரைகள் உள்ளன. இங்குள்ள சிற்பங்கள் தச அவதாரங்களை விளக்குகின்றன. மற்றொரு மண்டபத்தில் நவக்கிரகங்கள் வரையப்பட்டுள்ளன. கோயிலின் இருபுறமும் துவாரபாலகர்கள் மரத்தில் அழகாக செதுக்கப்பட்டுள்ளனர்.
துர்கை சன்னதி உள்ளது. இந்த கோயிலை பல ஆண்டுகளுக்கும் மேலாக முதலை ஒன்று காவல் காக்கும் தகவல் ஆச்சரியமானது. பபியா என்ற பெயருடைய இம்முதலைக்கு கோயில் சார்பாக மரியாதை அளிக்கப்படுகின்றது. ஒவ்வொரு நாளும் உச்சிகால பூஜையின் போது கோயில் குருக்கள், வெல்லம் கலந்த சாதத்தை சாப்பிட கொடுக்கின்றனர். இந்த முதலை ஏரியில் குளிக்க செல்லும் பக்தர்கள் மற்றும் கோயில் குருக்களை இதுவரை தாக்கியதில்லை,இது சாதுவான முதலையாகும். ஒரு முதலை இறந்தால், மற்றொரு முதலை அந்த இடத்திற்கு கோயிலை பாதுகாக்க வந்துவிடும் என்கின்றனர்.

எப்படி செல்வது: காசர்கோட்டில் இருந்து 16 கி.மீ.
விசேஷ நாள்: புரட்டாசி சனிக்கிழமை, வைகுண்ட ஏகாதசி
நேரம்: அதிகாலை 5:30 - 12:30 மணி; மாலை 5:30 - 7:30 மணி
தொடர்புக்கு: 04998 - 214 360
அருகிலுள்ள தலம்: மங்களூர் சோமநாதர் கோயில் 80 கி.மீ.,
நேரம்:அதிகாலை 5:00-9:00 மணி; மாலை 6:00- 8:00 மணி

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X