மலரே! பாச மலரே!
ஜூலை 26,2022,10:28  IST

திரிபுரா கோமதி மாவட்டம் உதய்பூர் நகரிலுள்ள ஒரு குன்றின் மீது திரிபுரேஸ்வரி என்னும் பெயருடன் அம்பிகை குடிகொண்டிருக்கிறாள். திரிபுரா, மேற்கு வங்க மாநில மக்களின் இஷ்ட தெய்வமாக திகழும் இந்த அம்மனுக்கு திரிபுரசுந்தரி என்றும் பெயருண்டு. இங்கு வந்தால் சகோதர, சகோதரி இடையே ஏற்பட்ட பகை மறையும். குடும்பத்தில் பாசமலர்கள் பூக்கும்.
15ம் நுாற்றாண்டில் 'தன்ய மாணிக்ய' என்பவர் இப்பகுதியை ஆட்சி செய்தார். அவரது கனவில் அம்பிகை தோன்றி குறிப்பிட்ட இடத்தில் சிலை வடிவில் தான் புதைந்து கிடப்பதாகவும், அதை இங்குள்ள குன்றின் மீது பிரதிஷ்டை செய்யவும் உத்தரவிட்டாள். அங்கு தோண்டிய போது ஐந்தடி உயர திரிபுர சுந்தரி, இரண்டடி உயர சண்டி தேவி சிலைகள் கிடைத்தன.
இங்கு குன்றின் மீது மகாவிஷ்ணுவின் பழமையான கூர்ம அவதார கோயில் இருந்ததால், அம்மனுக்கு கோயில் கட்ட தயங்கினார் மன்னர். ஆனால் அவரது கனவில் பிரம்மா தோன்றி, 'தயக்கம் வேண்டாம். மகாவிஷ்ணுவும், அம்பிகையும் உடன்பிறந்தவர்கள் என்பதால் ஒரே இடத்தில் கோயில் கட்டலாம்' எனக் கூறி மறைந்தார். அதன் பின்னர் 1501ல் மகாவிஷ்ணு கோயில் அருகில் திரிபுரேஸ்வரி கோயில் கட்டப்பட்டது.
சக்தி பீடங்களில் ஒன்றான இங்கு பார்வதியின் உடல் பாகங்களில் இடதுகால் சுண்டுவிரல் விழுந்த இடம் இது. கோயில் முகப்பில் 75 அடி உயர கோபுரம் வங்காள ஏகரத்னா கட்டடபாணியில் அமைக்கப்பட்டுள்ளது. கருவறையில் அம்மன் ஆக்ரோஷத்துடன் காட்சியளிக்கிறாள். பிரம்மாண்ட கிரீடம், ஆபரணங்கள், மாலைகள், செவ்வாடையுடன் நின்ற நிலையில் இருக்கிறாள். இனிப்பு, காரப் பண்டங்கள் நைவேத்யம் செய்யப்படுகின்றன. கோயிலின் கிழக்கில் கண்யாண சாகர் என்னும் ஏரி உள்ளது. இதில் ஆமைகள் அதிகளவில் உள்ளன. நவராத்திரி விழாவின் போது லட்சக்கணக்கில் பக்தர்கள் தரிசிப்பர்.
2019ம் ஆண்டு வரை ஆடு பலியிடும் வழக்கம் இருந்தது. பைரவருக்குத் தனி சன்னதி இங்குள்ளது.

எப்படி செல்வது: அகர்தலாவில் இருந்து 55 கி.மீ.,
விசேஷ நாள்: தீபாவளி, காளி பூஜை, துர்கா பூஜை
நேரம்: அதிகாலை 5:00 - இரவு 9:00 மணி
தொடர்புக்கு: 84140 35889, 03821 - 223 520
அருகிலுள்ள தலம்: கஸ்பா காளி பாரி கோயில்
நேரம்: காலை 6:00 - மாலை 6:00 மணி
தொடர்புக்கு: 0381 - 2300 332

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X