கேளுங்க சொல்கிறோம்!
ஆகஸ்ட் 04,2022,11:46  IST

எம்.ஹரிணி, வில்லிவாக்கம், சென்னை.
*ஆடிவெள்ளி அன்று பெண்களுக்கு வளையல் தருவது ஏன்?.
பூமியில் பார்வதி அவதரித்து நதிகளுக்கு புனிதம் அளித்த மாதம் ஆடி. ஆடிவெள்ளி அன்று அம்மன், நதிகளை வழிபட்டு பெண்களுக்கு வளையல்களை பிரசாதமாக அளிப்பர். இதனால் சுமங்கலி பாக்கியம் உண்டாகும்.

எம்.ரேகா, திருக்கோவிலுார், விழுப்புரம்.
*வில்வார்ச்சனை பற்றி சொல்லுங்கள்.
வில்வ இலையால் சிவனுக்கு அர்ச்சனை செய்தால் பாவம் தீரும். திங்களன்று செய்ய மனபலம் கூடும். தொடர்ந்து 48 நாள் செய்தால் விருப்பம் நிறைவேறும்.

எம்.பிரகதி, காயல்பட்டினம், துாத்துக்குடி.
*அபிராமி அந்தாதி பாடினால் திருமணம் நடக்குமா?.
மாலை நேரத்தில் விளக்கேற்றி அபிராமி அந்தாதியை பாடினால் திருமணம் உள்ளிட்ட எல்லா நன்மைகளும் நடக்கும்.

எம்.வந்தனா, கடமலைக்குண்டு, தேனி.
*மாலையில் சுப்ரபாதம் கேட்கலாமா?.
சுப்ரபாதம் என்பதற்கு 'மங்களகரமான அதிகாலை' என பொருள். காலையில் கேட்பதே நல்லது.

எஸ்.அனிதா, சிதம்பரம், கடலுார்.
*இஷ்ட தெய்வத்தை வழிபடுவோருக்கு நவக்கிரக வழிபாடு அவசியமா.
இஷ்ட தெய்வ வழிபாடு என்பது உணவு உண்பது போன்றது. நவக்கிரக வழிபாடு என்பது நோய் எதிர்ப்பு சக்தி போன்றது. இரண்டும் அவசியமானதே.

எம்.அருண், கல்யாண்புரி, டில்லி.
*நினைத்தது நிறைவேற பரிகாரம் சொல்லுங்கள்.
விடாமுயற்சியுடன் செயல்படுங்கள். வெள்ளி அன்று விளக்கேற்றி துர்கையை வழிபடுங்கள்.

கே.பிரணவ், கொல்லங்கோடு, கன்னியாகுமரி.
*ஆண்கள் திருநீறு மட்டும் இடலாமா?.
திருநீறுடன், குங்குமம் இடுவதே சிறப்பு. சிவனின் அம்சமான திருநீறு, சக்தியின் அம்சமான குங்குமம் சேர்ந்தால் தான் சிவசக்தி என்னும் முழுமை கிடைக்கும்.

சி.சந்தோஷ், அல்சூரு, பெங்களூரு.
*பரிகாரம், நேர்த்திக்கடன் - இதில் முக்கியமானது?.
இரண்டும் முக்கியமே. பரிகாரம் என்பது வேண்டியதைப் பெறுவதற்காகச் செய்யும் வழிபாடு. நேர்த்திக்கடன் என்பது பலன் கிடைத்த பின் செய்யும் நன்றிக்கடன்.

பி.சொர்ண வள்ளி, அருவங்காடு, நீலகிரி.
*விராட்புருஷன் என்றால் என்ன?.
இணையற்ற ஆற்றல் கொண்டவர் என்பது இதன் பொருள். உலகம் அழிந்த பின் மீண்டும் உலகைப் படைக்க பிரம்மாண்ட வடிவில் மகாவிஷ்ணு அவதரிப்பார். அந்நிலையில் மகாவிஷ்ணுவை 'விராட் புருஷன்' என அழைப்பர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X