இலக்கியத்தில் காவிரி
ஆகஸ்ட் 04,2022,11:49  IST

காவிரி தெய்வத்தன்மை உடையது. அதில் நீராடினால் நம் பாவங்கள் அனைத்தும் தீரும். இதை தமிழ் இலக்கியத்தில் பல்வேறு இடங்களில் காணலாம்.
* இந்த புண்ணிய நீரை பொன் குடத்தில் முகந்து, இந்திரன் சிலையை அபிேஷகம் செய்துள்ளனர்.
* தெய்வக் காவிரியாம், அது குளித்தோரின் தீவினையை தீர்க்கும்.
* கரையில் உள்ள சிவபெருமானை வணங்கிச் செல்வதால், இவளும் சிவனடியாரை போன்றவள் என சொல்லியுள்ளனர்.
* அரிச்சந்திரன், அர்ஜூனன் போன்ற பலரும் இவளால் நற்பேறு அடைந்துள்ளனர்.
* பார்வதிதேவியை போலவே இவளும் மலையில் பிறந்தவள். அவள் உலக உயிர்களை காப்பதுபோல், இவளும் நீர் அளித்து உயிர்களை காக்கிறாள்.
* பொன்னி, வருபுனல் பொன்னி, வருநீர்ப்பொன்னி, செல்வப்புனல் பொன்னி, செழும் பொன்னி என்று இவளை செல்லமாக அழைப்பர்.
* கங்கையைப் போல காவிரியும் புனிதமானது என, பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான தொண்டரடிப் பொடியாழ்வார் கூறியுள்ளார்.
* வால்மீகி ராமாயணம் என்றால் கங்கை ஆறு. கம்ப ராமாயணம் என்றால் காவிரி ஆறு. அந்த அளவிற்கு இவளின் பெருமையை கூறியுள்ளார் கம்பர்.
* மகாகவி சுப்பிரமணிய பாரதியார் தமது பாடலில் கங்கை, காவிரியை இணைத்துள்ளார். அதாவது கங்கை பகுதியில் விளையும் கோதுமைக்கு காவிரிப் பகுதியில் விளையும் வெற்றிலையை மாற்றாக கொடுப்போம் என்கிறார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X