திருப்பம் தரும் திருநாவலூர்
ஆகஸ்ட் 04,2022,11:51  IST

மகாவிஷ்ணு பூஜித்த பக்தஜனேஸ்வரர், சுந்தரர் பிறந்த தலம், நின்ற கோலத்தில் காட்சி தரும் தட்சிணாமூர்த்தி இன்னும் சிறப்பு இருக்கு தெரிஞ்சுக்குவோம். வாங்க கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலுாருக்கு...
பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்தபோது உண்டான விஷத்தை சிவபெருமான் உண்டார். அவற்றில் சிறிது துளி பூமியில் விழுந்து நாவல் வனமானது. அதுவே நாவலுார் எனப்பெயர் பெற்றது. பிரகலாதனின் தந்தை இரணியனை வதம் செய்ய ஆற்றல் வேண்டி மகாவிஷ்ணு திருநாவலுார் பக்தஜனேஸ்வரரை வழிபட்டுள்ளார். கருவறையில் சுயம்பு திருமேனியில் காட்சி தருகிறார். மனோன்மணி என்ற பெயரில் அம்பாளுக்கு தனிக்கோயில் உள்ளது. திருத்தொண்டர் தொகை தந்த சுந்தரர் பிறந்த தலமாகும். இவரது துணைவியர்களுடன் தனிச்சன்னதியில் உள்ளார். இங்கு நாயன்மார்களான இசைஞானியார், சடையநாயனார், வழிபட்டுள்ளனர். இங்குள்ள தட்சிணாமூர்த்தி ரிஷப வாகனத்தில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இத்தலத்தில் சுக்கிர தோஷநிவர்த்தி, திருமணம், வியாபார வளர்ச்சிக்கு சுக்கிரன் நிறுவிய லிங்கத்திற்கு வெள்ளியன்று வழிபாடு நடக்கின்றன.பிரகாரத்தில் நரசிங்க முனையரையர் வழிபட்ட 16 பட்டையுடன் சிவலிங்கம், பிள்ளையார், அறுபத்து மூவர், சேக்கிழார், சப்தமாதர்,சோமாஸ்கந்தர், வள்ளி - தெய்வானை சமேத ஆறுமுகர், நடராஜர் சன்னதிகள் உள்ளன. கோயில் கருவறை சுவரில் சண்டிகேஸ்வரர் வரலாறு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளன.
கோயில் பிரகாரத்தில் வடக்குச்சுற்றில் ஸ்ரீதேவி பூதேவியுடன் வரதராஜப்பெருமாளுக்கு தனிச்சன்னதி உள்ளது. இக்கோயில் முருகன் மீது அருணகிரிநாதர் திருப்புகழ் பாடியுள்ளார். தலவிருட்சம் நாவல்மரம், தீர்த்தம் கோமுகி தீர்த்தமாகும். காஞ்சி மஹாபெரியவரின் பொன் விழாவை நினைவு கூறும் விதத்தில் இக்கோயில் ராஜகோபுரத் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. கோயிலுக்கு அருகில் தனியாக சுந்தரர் மடாலயம் உள்ளது சிறப்பு.

எப்படி செல்வது: விழுப்புரத்திலிருந்து 26 கி மீ.,
விசேஷ நாள்: சித்திரை தேர்த்திருவிழா, ஆடிப்பூரம், சுவாதி, ஆவணி உத்திரம்
நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 4:30 - 8:30 மணி
தொடர்புக்கு: 94433 82945, 94436 24585
அருகிலுள்ள தலம்: திருவெண்ணெய்நல்லுார் கிருபாபுரீஸ்வரர் கோயில் 28 கி.மீ.,
நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 4:30 - 8:30 மணி
தொடர்புக்கு: 93456 60711

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X