எதற்கும் தயாராக இரு
ஆகஸ்ட் 04,2022,12:13  IST

* வாழ்க்கையில் ஏற்றமும் வரும். இறக்கமும் வரும். எதற்கும் தயாராக இரு.
* அற நுால்களை படி. இதுவே உன்னை உயர்நிலைக்கு அழைத்துச் செல்லும்.
* பிறர் போற்றினால் மகிழ்ச்சி அடையாதே. துாற்றினால் வருந்தாதே.
* ஆசை ஒருவனை அழிக்கும் குணம் கொண்டது. ஆனால் அன்பு வளர்க்கும் குணம் கொண்டது.
* பிறருடைய குற்றங்களை ஆராயாதே. உன்னுடைய குற்றங்களை மறைக்காதே.
* உன் எண்ணத்தை பொறுத்துதான், உனது வாழ்வு தீர்மானிக்கப்படுகிறது.
* தர்மவழியில் தேடிய செல்வம் பல தலைமுறைக்கும் பயன் தரும்.
* மனிதனையும், விலங்கையும் பிரித்துக் காட்டும் கருவி ஒழுக்கம்.
* அன்பினால் கடவுளை வணங்கு. அவரிடம் வியாபாரம் செய்யாதே.
* மானம் காக்க ஆடையும், மனதைக் காக்க வழிபாடும் அவசியம்.
* பெற்றோரை விட சிறந்தவர் யாருமில்லை.
* ஞானிகளைப் பழித்தவன் மறுபிறப்பில் பைத்தியமாகப் பிறப்பான்.
* உறவினர் உன்னை கைவிட்டால் கூட நீ செய்த தர்மம் கைவிடாது.
* புத்தகத்தால் வரும் அறிவை விட, அனுபவத்தால் கிடைக்கும் அறிவு மேலானது.
* எல்லாம் தெரிந்தவர்களும் இல்லை; எதுவுமே தெரியாதவர்களும் இல்லை.

என்கிறார் வாரியார்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X