விசேஷ கருடன் சன்னதிகள்
ஆகஸ்ட் 04,2022,12:15  IST

கருட பஞ்சமி - ஆக.2

* காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலில் கருடசேவையை அதிகாலையில் தரிசிப்பது சிறப்பு.
* கும்பகோணம் அருகிலுள்ள நாச்சியார் கோயிலில் மூலவராக இருக்கும் கல் கருடனே வீதியிலும் உலா வருகிறார்.
* கும்பகோணம் அருகிலுள்ள திருவெள்ளியங்குடி கோயிலில் சங்கு, சக்கரத்துடன் கருடாழ்வாரை தரிசிக்கலாம்.
* நாகபட்டினம் மாவட்டம் திருக்கண்ணங்குடியில் இரண்டு கைகளையும் கட்டிய நிலையில் கருடன் காட்சி தருகிறார்.
* சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்துள்ள அரியக்குடி ஸ்ரீநிவாசப்பெருமாள் கோயில் மூலைக்கருடனுக்கு தேங்காயை சிதறுகாயாக உடைத்தால் தடைகள் விலகும்.
* விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரில் ரங்கமன்னார், ஆண்டாளுடன் கருடாழ்வாரும் கருவறையில் இருக்கிறார். இத்தலத்தில் ரங்கமன்னாரின் மாமனாராக இருப்பவர் கருடனே.
* விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் பாம்பு, அமிர்த கலசத்துடன் கருடனை தரிசிக்கலாம்.
* திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி கோயிலில் கருடனும், கொடிமரமும் நம்பாடுவான் என்னும் பக்தருக்காக சற்று விலகி நின்ற நிலையில் உள்ளனர்.
* துாத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஒன்பது கருட சேவை நடக்கும். நம்மாழ்வாரின் அவதார விழாவின் 5ம் நாளன்று நவதிருப்பதிகளிலுள்ள உற்ஸவர்கள் (ஒன்பது பெருமாள்கள்) ஆழ்வார் திருநகரிக்கு எழுந்தருள்வர்.
* திருப்பதி மலையிலுள்ள சுவாமி புஷ்கரணி என்ற குளத்தை வைகுண்டத்தில் இருந்து கொண்டு வந்தவர் கருடனே.
* திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி கோயிலில் ஏழடி உயர கருடன் நின்ற கோலத்தில் பாம்பை அணிந்த நிலையில் இருக்கிறார்.
* கர்நாடகாவிலுள்ள மாண்டியா மாவட்டம் மேல்கோட்டை திருநாராயணபுரம் கோயிலில் பங்குனி ஏகாதசியன்று வைரமுடி சேவை நடக்கிறது. இந்த வைரமுடியை(கிரீடம்) வைகுண்டத்தில் இருந்து கொண்டு வந்தவர் கருடனே.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X