நாகராஜருக்கு தனிக்கோயில்
ஆகஸ்ட் 04,2022,12:18  IST

நாகதோஷம் உடையவர்கள் இங்குள்ள நாகராஜர் கோயிலில் பரிகாரம் செய்தால் போதும் நன்மை நடக்கிறது வாங்க கேரளாவிலுள்ள மண்ணாறசாலைக்கு...
கேரளா ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள ஹரிப்பாடு என்ற இடத்தில் மண்ணாறசாலையில் நாகராஜா கோயில் உள்ளது. இக்கோயில் மிகவும் பழமையானது. சுமார் ஆராயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது. இந்தியாவில் நாகத்திற்கு என்று தெய்வீக ஆற்றல் நிறைந்த தனிக்கோயில் இதுதான்.
சத்திரியர்களை கொன்ற தோஷம் நீங்க அந்தணர்களுக்கு பூமிதானம் செய்தார் பரசுராமர். அதில் அவர்கள் வாழ முடியாத சூழல் நிலவ மகாவிஷ்ணுவை நோக்கி தவமிருந்தார் பரசுராமர். அவருக்கு நேரில் காட்சி தந்து நாகராஜாவின் அருளால் கேரளபூமி சுபிட்ஷம் பெறும் என வரமளித்தார்.
கேரளாவின் தென்பகுதியில் ஒரிடத்தினை தேர்ந்தெடுத்து அங்கு தவமிருந்தார். காட்சி கொடுத்த நாகராஜர் எனக்கு இங்கு நடக்கும் நித்திய வழிபாட்டால் இப்பூமி வளம் பெறும் என ஆசி வழங்கினார். அதன்படியே தான் பிரதிஷ்டை செய்த நாகராஜாவிற்கு பூஜைகள் தொடர்ந்து நடந்திட பிராமண குடும்பங்களை நியமித்தார். அப்பரம்பரையில் வந்தவர்கள் இங்கு வசிக்கும் நாகங்களை காட்டுத்தீயில் இருந்து காப்பாற்றினர். இதன் பிறகு பூஜை வகிக்கும் முறை குடும்பத்தில் மூத்த பெண்ணுக்கு வந்தது. இக்கோயிலில் 30,000 க்கு மேற்பட்ட நாகர் கல்சிலைகளை பரிகாரத்திற்கு வந்த மக்கள் நிறுவியுள்ளனர். இதனால் இதன் மகிமையை நாம் அறிந்து கொள்ளலாம். திருவிதாங்கூர் மன்னர்கள் ஐப்பசிஆயில்யத்தில் விரதமிருந்து இங்கு சிறப்பு பூஜை செய்கின்றார்கள். நாகதோஷம், கர்மவினை தீர சிறந்த பரிகார தலம் இது.

எப்படி செல்வது: ஆலப்புழாவிலிருந்து 20 கி.மீ.,
விசேஷ நாள்: ஆடி, தை நாகசதுர்த்தி, மாசி சிவராத்திரி, ஆயில்யம் நட்சத்திரம்
நேரம்: காலை 7:00 - 12:00மணி; மாலை 5:30 - 7:00 மணி
தொடர்புக்கு: 0479-2413 214, 0479-2410 200
அருகிலுள்ள தலம்: ஹரிப்பாடு சுப்பிரமணியர் கோயில் 2 கி.மீ.,
நேரம்: அதிகாலை 4:00 - 11:30 மணி; மாலை 5:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 047-9241 0690

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X