கேளுங்க சொல்கிறோம்
ஆகஸ்ட் 17,2022,11:23  IST

கு.தேவதர்ஷனி, பெங்களூரு.
*வீட்டில் சுவாமி சிலை இருக்கலாமா?
இருக்கலாம். அதன் உயரம் 6 அங்குலத்திற்குள் (15 செ.மீ.,) இருப்பது நல்லது.

கே.சிதம்பரம், கடமலைக்குண்டு, தேனி.
*தந்தையும், மகனும் ஒரே ராசியாக இருந்தால் தோஷமா?
ராசி ஒன்றாக இருந்தால் தோஷம் இல்லை. ஒரே நட்சத்திரமாக இருந்தால் அதற்குரிய பரிகார ஹோமம் செய்வது நல்லது.

பி.அகிலாண்டம், ராதாபுரம், திருநெல்வேலி.
*ஆடிவெள்ளியன்று பாம்பு புற்றில் முட்டை, பால் வைக்கலாமா
முட்டை வேண்டாம்! பால் வைத்து வழிபட்டால் சர்ப்ப தோஷம், முன்னோர் சாபம் விலகும்.

சி.சுப்பையா, திருத்தங்கல், விருதுநகர்.
*பித்தளைத் தட்டில் சாப்பிடலாமா?
சாப்பிட வேண்டாம். வாழை இலை, தாமிரம், வெள்ளித் தட்டில் சாப்பிடுங்கள். நீண்ட ஆயுள், உடல்நலம் ஏற்படும்.

எல்.சுதா, ஆலந்துார், செங்கல்பட்டு.
*வீட்டில் துளசி மாடம் அமைக்க ஆசை. அதற்கு வழிகாட்டுங்கள்.
வீட்டின் வடகிழக்கு(ஈசானம்) மூலையில் மாடம் அமைத்து துளசியை நடுங்கள். தினமும் காலையில் நீராடியதும் செடிக்கு தண்ணீர் ஊற்றி குங்குமம், மலரிட்டு மூன்று முறை வலம் வந்து வணங்குங்கள். தீட்டு காலத்தில் துளசியை தொடுவது கூடாது.

பி.ராம், காட்டுமன்னார்கோவில், புதுச்சேரி.
*செல்லப்பிராணிகளை வீட்டுத் தோட்டத்தில் புதைக்கலாமா?
இறந்த எந்த உடலையும் வீட்டுத் தோட்டத்தில் புதைக்க வேண்டாம். மீறினால் நல்ல சக்திகள் வீட்டிற்கு வருவது தடைபடும்.

கே.பிரதாப், தக் ஷிண்புரி, புதுடில்லி.
*சாப்பிடாமல் தான் சுவாமி தரிசனம் செய்ய வேண்டுமா...
சாப்பிடாமல் தரிசிப்பதே சிறப்பு. நீராடியதும் அதிகாலையில் 4:30 - 6:00 மணிக்குள் சுவாமி தரிசனம் செய்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும்.

எம்.கலா, கவுண்டம்பாளையம், கோயம்புத்துார்.
*வன்னி மரத்தை வீட்டில் வளர்க்கலாமா....
சனீஸ்வரருக்கு உரியது வன்னிமரம். உஷ்ணம் மிகுந்த இந்த மரத்தைக் கடைந்து நெருப்பை உருவாக்கி யாகம் நடத்துவது சிறப்பு. இதைக் கோயில் நந்தவனம், பூங்காவில் வளர்ப்பதே நல்லது.

சிவ.ராமன், நாகர்கோவில், கன்னியாகுமரி.
*எங்கள் வீட்டில் பூஜையறை இல்லை. ஹாலில் விளக்கேற்றலாமா?
தனியறை இல்லாத வீடுகளில் ஹாலில் உள்ள அலமாரியை பூஜைக்கு பயன்படுத்தலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X