மறவாத வரம் வேண்டும்
ஆகஸ்ட் 17,2022,12:04  IST

காயத்ரி என்பதற்கு 'யார் எல்லாம் தன்னை கானம் பண்ணுகிறார்களோ அவர்களை காப்பது என்பது அர்த்தம்' என்கிறார் காஞ்சி மஹாபெரியவர்.
'கானம் பண்ணுவது' என்றால் அன்பு, பக்தியுடன் உச்சரிப்பது என்பது பொருள்.
'பக்தியுடன் ஜபிப்பவர்களை காயத்ரி மந்திரம் கவசம் போல காக்கும்' என்பது அவரது அருள்வாக்கு.
மூன்று வேதங்களில் இருந்தும் ஒவ்வொரு சொல்லாக எடுத்த மந்திரம் காயத்ரி என்கிறார் மனு. காயத்ரி மந்திரம் ஆண்களுக்கானது. இதை ஆண்கள் ஜபித்தாலே குடும்பத்திலுள்ள பெண்களுக்கும் நன்மை உண்டாகும். மற்ற மந்திரங்களை நீண்ட காலமாக ஜபித்த பின்னரே 'சித்த சுத்தி' என்னும் மனத்துாய்மை உண்டாகும்.
ஆனால் காயத்ரியை ஜபித்தது முதல் நாளிலேயே சித்தசுத்தி உண்டாக தொடங்கி விடும். அனைத்து நலன்களையும் தரும் காயத்ரி என்னும் மந்திரசக்தி நம்முள் அணையாமல் விருத்தியாக அருள்புரிய வேண்டும் என கடவுளை பிரார்த்திப்போம். ஒருநாளும் இந்த மந்திரத்தை மறக்காத வரம் கிடைக்கட்டும். இதிலுள்ள எழுத்துக்களும், அதற்குரிய சக்தியும், ஜபிப்பதால் கிடைக்கும் பலனும் இங்கு இடம் பெற்றுள்ளது.

எழுத்து - சக்தி - பலன்
தத் - தபினி - வெற்றி
ச - சாமுண்டி - வலிமை
வி - விஷ்வா - நல்ல அறிகுறி
துர் - துஷ்டி - நல்வாழ்வு
வ - வரதாம்பிகை - யோகம்
ரே - ரேவதி - பிரிந்தவர் சேர்தல்
ண் - ருக்ஷ்மா - செல்வ வளம்
யம் - ஞானாம்பிகை - கல்வி வளம்
பர் - பார்கவி - தங்கம், நவரத்தின யோகம்
கோ - கோமதி - அறிவு, ஞானம்
தே - தேவிகா - மங்கள நிகழ்வு
வ - வராகி - தீய சக்திகள் அழிதல்
ஸ்ய - சின்ஹனி - பாதுகாப்பு
தீ - தியானாம்பிகை - தீர்க்காயுள்
ம - மர்யாதா - கண்டம் வராமல் காத்தல்
ஹி - ஸ்புட நாயகி - ஆன்மிகத்தில் சாதனை
தி - மேதா - வருங்காலத்தை அறியும் திறன்
யோ - யோகமாயா - விழிப்புணர்ச்சி
நஹ் - தாரணி - இல்லற இன்பம்
ப்ர - ப்ரபவா - உயர்ந்த குறிக்கோள்
சோ - ஊஸ்மா - தைரியம்
த - த்ரஷ்யா - நல்லறிவு
யாத் - நிரஞ்சனாதேவி - தொண்டுள்ளம்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X