மனமும்! மகிழ்ச்சியும்!
செப்டம்பர் 04,2022,14:04  IST

வியாபாரி ஒருவர் மனச்சோர்வுடன் கடற்கரையில் அமர்ந்திருந்தார். இதைப் பார்த்த ஒருவர், ''ஏன்? இப்படி அமைதியாக இருக்கிறீர்கள். உடல்நலம் சரியில்லையா?'' எனக் கேட்டார்.
''பணம் தேவைக்கும் அதிகமாக உள்ளது. ஆனால் மனம் வெறுமையாக இருக்கிறது. மகிழ்ச்சி எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை'' என வருந்தினார்.
''சரி. எனக்கு ஐம்பது லட்சம் கடன் கொடுங்கள். இரண்டே ஆண்டில் அதை கொடுத்து விடுகிறேன்'' என்றார்.
''என்னய்யா விளையாடுகிறாயா. நீ யாருன்னே தெரியாது. அவ்வளவு ஈஸியா கடன் கேட்குற'' என கோபப்பட்டார் வியாபாரி.
''இப்போ மட்டும் எங்கிருந்து கோபம் வந்தது'' என வந்தவர் கேட்க, அவர் பேசமுடியாமல் தவித்தார்.
“கோபம், மகிழ்ச்சி, துன்பம் எல்லாம் ஒரு மனநிலையே. மனதை வைத்தே அனைத்தும் தீர்மானிக்கப்படுகிறது'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X