ராபியா பஸ்வி என்ற பெண்ஞானியிடம் உரையாட சிலர் வருவார்கள். அவர்களுள் ஒருவர், இவரை மட்டம் தட்ட நினைத்தார். ''தன் துாதராக இறைவன் ஆண்களைத்தானே அனுப்பியுள்ளான். ஒரு பெண்ணைக் கூட அனுப்பவில்லையே'' என பெண்ஞானியிடம் சொன்னார்.
அதற்கு அவர், ''இறை துாதர்களைப் பெற்று எடுப்பதே பெண்கள்தானே'' என பதிலடி கொடுத்தார். இதைக்கேட்ட அவர் தலை குனிந்தார்.