பிறருடைய வீட்டிற்கு விருந்தினராக செல்பவரின் கண்கள் சில நேரங்களில் அங்குள்ள பொருட்களை பார்க்கும். இவர் நம் உறவினர் தானே, நண்பர் தானே என கருதி உரிமையோடு பயன்படுத்துவர். அவருடைய அலைபேசியை எடுத்து தேவையின்றி பேசுவது, அங்குள்ள ரிமோட்டை எடுத்து 'டிவி' சேனல்களை மாற்றுவது, அவர் வைத்திருக்கும் புத்தகத்தை எடுத்து படிப்பது என தன் இஷ்டப்படி நடப்பார்கள். பிறருடைய பொருட்களை அவர் அனுமதி பெறாமல் பயன்படுத்தாதீர்கள் என்கிறார் நாயகம்.