மக்களிடம் காணப்படும் குறைகளில் ஒன்று ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காது இருத்தல். இது குடும்பம், உறவு முறை, பணி புரியுமிடம், வியாபாரம் செய்யுமிடம் என சகல இடத்திலும் மறைமுகமாக காணப்படும். இந்த மாதிரியான நபர்களை கண்டறிந்து நாம் விழிப்புணர்வாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிடில் அவர்கள் செய்யும் தவறுகளை பிறர் மீது குற்றம் சாட்டி விடுவர். நாம் எங்கு இருந்தாலும் விழிப்புணர்வும், சகிப்புத்தன்மையும் அவசியம்.