கேளுங்க சொல்கிறோம்
செப்டம்பர் 23,2022,09:28  IST

எல்.ராமநாதன், அம்பத்துார், திருவள்ளூர்.
திதியன்று வைத்த சோற்றை காகம் எடுக்கவில்லையே...
காகத்திற்கு சோறு வைத்து விட்டு நிம்மதியாக இருங்கள். அதைத் தவிர மற்ற உயிர்கள் சாப்பிட்டாலும் புண்ணியமே!

ரா.ராஜேஸ்வரி, சிதம்பரம், கடலுார்.
மனம் புத்துணர்வு பெற எந்த பதிகம் பாடலாம்?
திருஞான சம்பந்தர் பாடிய 'காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி' எனத் தொடங்கும் பதிகத்தை பாடுங்கள். புத்துணர்வு பெறுவீர்கள்.

ஆர்.ரவி, தளவாய்புரம், விருதுநகர்
சுக்லாம் பரதரம் எனத் தொடங்கும் ஸ்லோகம் எந்த கடவுளுக்கு உரியது?
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்
ப்ரஸந்த வதநம் த்யாயேத்
சர்வ விக்நோப சாந்தயே
இந்த ஸ்லோகத்தில் வரும் விஷ்ணு, ப்ரஸன்ன வதனம் என்னும் சொற்களை கவனியுங்கள். விஷ்ணு என்றால் எங்கும் நிறைந்தவர்; ப்ரஸன்ன வதனம் என்றால் மகிழ்ச்சியான முகம் (அ) யானை முகம் எனப் பொருள் உண்டு. இந்த ஸ்லோகத்தைச் சொல்லி விநாயகர், மகாவிஷ்ணுவை வழிபடலாம்.

சி.தவமணி, மேட்டுப்பாளையம், கோயம்புத்துார்.
சமயதீட்சை பெற யாரை அணுகலாம்?
சிவபூஜை செய்யும் சிவாச்சாரியார்கள், குருமார்களை அணுகுங்கள்.

ச.நாராயணன், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி.
நந்தியாவட்டை பூ எந்த தெய்வத்திற்கு சாத்தலாம்?
எல்லா தெய்வத்திற்கும் சாத்தலாம். சிவபெருமானுக்கு சாத்துவது சிறப்பு.

ஜீ.சசி, கோவிந்த்புரி, டில்லி.
பக்த கோடிகள் என அழைப்பது ஏன்?
எண்களில் பெரியது கோடி. பக்தரை கவுரவமாகக் குறிப்பிடவே 'பக்த கோடிகள்' என்கிறோம்.

ஏ.நாகசுந்தரம், மார்த்தாண்டம், கன்னியாகுமரி.
பெண் சித்தர்களில் பிரபலமானவர் உண்டா...
தவம், தொண்டு என வாழ்வை கடவுளுக்கு அர்ப்பணித்த பெண்களும் சித்தர்களே.
ராமகிருஷ்ணரின் மனைவி சாரதாதேவி, சென்னை திருவான்மியூர் ஸ்ரீசக்ர அம்மா, கன்னியாகுமரி மாயா போன்ற சித்தர்கள் நம் நாட்டில் இருந்திருக்கிறார்கள்.

எம்.ராகுல், பெங்களூரு.
நான் பிற மொழிகளில் சிறந்து விளங்க விரும்புகிறேன். யாரை வழிபடலாம்?
புதன் தோறும் மகாவிஷ்ணுவுக்கு துளசி மாலை, நவக்கிரகமான புதனுக்கு விளக்கு ஏற்றி வழிபடுங்கள்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X