இதுவே வெற்றிக்கான ரகசியம்
செப்டம்பர் 23,2022,09:51  IST

* ஒரு செயலை செய்து முடிக்கும்வரை, யாரிடமும் அதைப்பற்றி சொல்லாதே. இதுவே வெற்றிக்கான ரகசியம்.
* பிறர் வீட்டிற்கு சென்று வாழ்வதுதான் நமக்கு மிகவும் கஷ்டமான விஷயம்.
* குழந்தைகளுக்காக சொத்து சேர்ப்பதை விட, அவர்களுக்கு நல்லதை சொல்லிக்கொடு.
* சந்தேகத்துடன் தொடங்கும் காரியம், சங்கடத்திலேயே முடியும்.
* விதியை நம்பிக்கொண்டிருப்பவன் எதையும் செய்யமாட்டான்.
* அறிவு இருந்தும் திறமையாக அதை பயன்படுத்தாவிட்டால், உலகம் அவனை மதிக்காது.
* முதலாளியின் குணம் அறிந்தவர்கள், பணியை வெற்றிகரமாக செய்து முடிப்பார்கள்.
* உனக்கு ஒன்றுமே தெரியாது என்றாலும் பரவாயில்லை. தினமும் படி அறிவாளியாகிவிடுவாய்.
* உன் பேச்சை பொறுத்தே, உன் எதிர்காலம் அமையும்.
* உனக்கு உதவி செய்தவர்களை ஒருபோதும் மறந்துவிடாதே.
* எப்போதும் மகிழ்ச்சியாக இரு. கடினமான செயல் எளிதாகிவிடும்.
* முட்டாளாக இருக்காதே. எல்லா விஷயத்தையும் அறிந்துகொள்.
* பெரியவர்களின் அறிவுரையை கேட்டால் நல்ல பாதையில் பயணிக்கலாம்.

சொல்கிறார் சாணக்கியர்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X