இந்த வாரம் என்ன
செப்டம்பர் 23,2022,09:52  IST

செப்.16, ஆவணி 31: திருநெல்வேலி நெல்லையப்பர், காந்திமதி திருமஞ்சனம், ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி எழுந்தருளல், சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் புறப்பாடு, திருத்தணி முருகன் கிளி வாகனம்.

செப்.17, ஆவணி 32: ஷடசீதி புண்ணிய காலம், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி புறப்பாடு, ஸ்ரீரங்கம், திருவள்ளூர், காஞ்சிபுரம் பெருமாள் திருமஞ்சனம், அழகர்கோவில் அழகர், மதுரை கூடலழகர், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள், ரங்கமன்னார் புறப்பாடு.

செப்.18, புரட்டாசி 1: மத்யாஷ்டமி, லெட்சுமி பூஜை, மஹாவியதீபாதம், கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் கோயிலில் அனுமன் திருமஞ்சனம், பிதுர் தர்ப்பணம்.

செப்.19, புரட்டாசி 2: அவிதா நவமி, ஸ்ரீபெரும்புதுார் மணவாள முனிகள் உடையவருடன் புறப்பாடு, சங்கரன் கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம், திருப்பதி ஏழுமலையான் உடையவருடன் புறப்பாடு.

செப்.20, புரட்டாசி 3: சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல், பத்ராசலம் ராமர் புறப்பாடு, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ஆண்டாள் திருமஞ்சனம்.

செப்.21, புரட்டாசி 4: ஏகாதசி விரதம், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள், ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல், திருமயம் சத்தியமூர்த்தி புறப்பாடு, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம், அழகர்கோவில் அழகர் புறப்பாடு.

செப்.22, புரட்டாசி 5: சன்யஸ்த மஹாளயம், சுவாமி மலை முருகன் வைரவேல் தரிசனம், திருப்பதி ஏழுமலையான் கத்தவால் மண்டபம் எழுந்தருளல், அகோபிலமடம் 18 வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திர வைபவம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X