கேளுங்க சொல்கிறோம்
செப்டம்பர் 28,2022,14:09  IST

எல்.வாணி, பகாட்கஞ்ச், டில்லி.
*குலதெய்வ வழிபாடு கட்டாயமா...
நம்மை வாழ வைக்கும் குலதெய்வத்தை மறப்பதோ, புறக்கணிப்பதோ பெரும்பாவம். குலதெய்வத்தை வழிபடாவிட்டால் அதன் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

அ.கமலம், காட்டுமன்னார்கோவில், புதுச்சேரி.
*பூஜை அலமாரி சிறியதாக உள்ளது. என்ன படம் இருக்கலாம்?
விநாயகர் முருகனுடன் சேர்ந்த அம்மையப்பர், ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் படங்கள் இருந்தால் நல்லது.

இ.நாகராஜன், சாத்துார், விருதுநகர்.
*பண்டிகையன்று புத்தாடை அணிவது ஏன்?
நமக்காகத்தான். பண்டிகைக்கான வழிபாடு, சடங்கு, தத்துவம் என நிர்ணயம் செய்த ஹிந்து மதம் நம் கொண்டாட்டம், மகிழ்ச்சியையும் கருத்தில் கொண்டுள்ளது.

எல்.ஸ்ரீராம், துடியலுார், கோயம்புத்துார்.
*கோயிலுக்கு மின்சார வாத்தியம் வாங்கித் தரலாமா?
பூஜையின் போது மங்கள வாத்தியம் ஒலிப்பது புண்ணியம். தாராளமாக தரலாம்.

சி.வசந்தி, பிராட்வே, சென்னை
*இந்த காலத்தில் ஜாதி, மதமாற்ற திருமணம் பெருகி விட்டதே...
நம் முன்னோர்களை அறிவில்லாதவர்கள் என அடையாளப்படுத்தி ஹிந்து தர்மம், கலாசாரத்தை சீரழிக்க முயற்சி நடக்கிறது. இளைய தலைமுறையினர் இதை உணர்வது அவசியம்.

கே.ராஜன், அஞ்சுகிராமம், கன்னியாகுமரி.
*எதிரியை பழி வாங்கத் துடிக்கிறேன். அறிவுரை சொல்லுங்கள்.
விட்டுக் கொடுத்தவன் கெட்டுப் போவதில்லை. பழிவாங்கும் எண்ணத்தால் பகை தான் வளரும். நிம்மதி கெடும். 'அவர் நாண நன்னயம் செய்து விடல்' என்கிறார் திருவள்ளுவர். விட்டுக் கொடுத்தால் எதிரியும் திருந்தி நண்பராக மாறுவர்.

வே.ஜோதி, சுரண்டை, தென்காசி.
*கடவுள் சக்தியை விட பில்லி சூனியத்திற்கு சக்தி அதிகமா?
கடவுள் சக்தியே மேலானது. ஆனாலும் தீயசக்தியால் துன்பம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. உதாரணமாக ஒரு நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர் நல்லவராக இருந்தாலும் பணியாளர்களில் சிலர் பிறருக்கு தீங்கு செய்கிறார்களே எப்படி? அவர்கள் தலைமையை விட அதிகாரம் படைத்தவர்களா என்ன... இல்லையே!

பி.ஆர்த்தி, பெங்களூரு.
*சுமங்கலிகள் பிளாஸ்டிக் வளையல் அணியலாமா?
அணியலாம். நாகரிகம் என்ற பெயரில் மங்கல ஆபரணங்கள் அணிவதை குறையாக கருதுபவர்களை விட, பிளாஸ்டிக் வளையல் அணிபவர்கள் எவ்வளவோ நல்லவர்கள் என சந்தோஷப்படுங்கள்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X