சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்
செப்டம்பர் 28,2022,14:25  IST

* அடிக்கடி புண்ணிய செயல்களை செய்தால் புத்தி வளரும். புத்தி வளரும்போது பாவத்தை செய்ய மனம் வராது.
* அமாவாசையன்று புனித தீர்த்தங்களில் குறிப்பாக கடலில் நீராடினால் முன் வினைப்பாவம் அகலும்.
* அநியாயத்தால் சம்பாதித்த பொருளை தர்மம் செய்தால் தோஷம் போகாது. மாறாக புது தோஷங்கள்தான் உருவாகும்.
* உள்ளூரில் உள்ள கோயிலில் திருவிழா, தேரோட்டம் நடைபெறும் நாளில், வீட்டில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சியை செய்தால் விசேஷ பலன் கிடைக்காது.
* வயதில் சிறியவர் கையில் இருந்து விபூதி எடுத்துப் பூசுதல் தவறு. குங்குமம் வாங்க வயது வித்தியாசம் இல்லை.
* அறிவு கடவுளால் தரப்பட்டது. அறிவைத் துணை கொண்டு செய்யப்படும் வேலையினால் குற்றம் உண்டாகாது.
* பிரேதத்தின் பின் போகுதல், மலை ஏறுதல், சமுத்திரத்தில் குளித்தல், வீடு கட்டுதல், துாரதேச யாத்திரை செய்தல், சிராத்த வீட்டில் சாப்பிடுதல் ஆகிய காரியங்களை கர்ப்பிணியுடன் இருக்கும் கணவன் தவிர்க்க வேண்டும்.
* நமக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்று உள்ளது. அதுதான் நமது வாழ்க்கையை வழிநடத்திச் செல்கிறது.
* கிரக தோஷத்திற்காக குறிப்பிட்ட கிழமையில் விரதம் கடைப்பிடிப்போர், தனக்குரிய வயது எத்தனையோ அத்தனை வாரங்கள் அதைச் செய்ய வேண்டும்.
* திருக்கார்த்திகை அன்று பெண்கள் வீடுகளில் வரிசையாக தீபம் ஏற்றி வைத்தால், உடன்பிறந்த சகோதரனின் ஆயுளும், செல்வமும் பெருகும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X