நவராத்திரி விழா
செப்டம்பர் 28,2022,14:26  IST

* மகிஷாசுரன் என்ற அரக்கனுடன் ஆதிபராசக்தி 9 நாட்கள் போர் செய்து, 10வது நாளில் வெற்றி பெற்றாள். இதையே நாம் நவராத்திரி விழா, விஜயதசமியாக கொண்டாடுகிறோம்.
* உத்திரப்பிரதேசத்தில் 'ராம்லீலா' என்றும், மேற்கு வங்கத்தில் 'துர்காபூஜை' என்றும், கர்நாடகத்தில் 'தசரா பண்டிகை' என்றும் நவராத்திரியை கொண்டாடுகின்றனர்.
* நவராத்திரி முதல் மூன்று நாள் லட்சுமிக்கும், அடுத்த மூன்று நாள் சக்திக்கும், கடைசி மூன்று நாள் சரஸ்வதிக்கும் உரியதாக தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது.
* நவராத்திரி தினத்தில் ஒவ்வொரு நாளும் அம்பிகையை பூஜித்தால், அனைத்து பலன்களையும் பெறலாம்.
* குமாரி, திருமூர்த்தி, கல்யாணி, ரோகிணி, காளி, சண்டிகா, சாம்பவி, துர்கா, சுபத்ரா என்னும் ஒன்பது வடிவங்களில் நவராத்திரி நாளில் ஆதிபராசக்தி காட்சி தருகிறாள். இந்நாளில் லலிதா சகஸ்ர நாமம் சொல்வது சிறப்பு.
* நவராத்திரி கொலுவை பராசக்தியின் விஸ்வரூப தரிசனம் என்றும் கூறலாம். உலகில் அனைத்தும் பராசக்தியின் அருளாலேயே நடைபெறுகிறது என்பதை இது உணர்த்துகிறது.
* நவராத்திரியின் ஒன்பது நாட்களும் அம்பிகையை பூஜித்தால், நம் வாழ்க்கை இன்னும் அழகாகும் என்பதே இவ்விழாவின் நோக்கம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X