நீங்களும் அதிர்ஷ்டசாலி
அக்டோபர் 04,2022,16:17  IST

கல்லுாரி மாணவனான ஜஸ்டின், தன் கல்லுாரியில் நடக்கும் நாடகத்தில் நடிக்க ஆர்வமாக இருந்தான். அதற்கான தேர்வில் கலந்து கொண்டான். மாலையில் வீடு திரும்பிய அவனிடம், ''டேய் தம்பி. நாடகத்தில் உனக்கு என்ன வேடம் கிடச்சது?'' என்று அவரது தந்தை கேட்டார்.
அதற்கு அவன், ''கூட்டத்தில் அமர்ந்து கை தட்டி ஆராவாரம் செய்யும் வாய்ப்பு கிடச்சிருக்கு'' என்றான்.
கவலையுடன் அவனது முகத்தை பார்த்துக் கொண்டிருந்தார் அவர்.
''அப்பா ஏன் கவலைப்படுறீங்க? வாழ்க்கையில் எது கிடைத்தாலும் அதை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நீங்கதானே சொல்லியிருக்கீங்க'' என்றான்.
பார்த்தீர்களா... இந்த மனம் உங்களிடம் இருந்தால் நீங்களும் அதிர்ஷ்டசாலிதான்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X