அழியும் அழகு
அக்டோபர் 04,2022,16:18  IST

அழகான அரசர் ஒருவர் நாட்டை ஆட்சி செய்து வந்தார். 'தன்னை விட அழகானவர்கள் உலகிலேயே இல்லை' என ஆணவம் கொண்டார். இதை கவனித்து வந்த அவரது மகன் திட்டம் ஒன்றை தீட்டினார்.
அதன்படி அரசவைக்கு வந்த வணிகர் ஒருவர், ''அரசரே! உங்களுக்காக அயல் தேசத்திலிருந்து மாணிக்க கல்லை கொண்டு வந்துள்ளேன். அதை பெற்றுக் கொள்ளுங்கள்'' என்றார். அவரும் அதை மகிழ்ச்சியோடு வாங்கினார்.
''அரசரே... முன்பு பார்த்ததைவிட உங்கள் அழகு சிறிதளவு குறைந்துள்ளதே'' எனக்கேட்டார் வணிகர்.
''என்ன உளறுகிறீர்கள். அப்படி குறைந்து இருந்தால் எனக்கு தெரிந்து இருக்கும். இல்லை என்னுடன் இருப்பவர்கள் சொல்லியிருப்பார்கள்'' என கோபப்பட்டார்.
''உங்கள் அழகு நாள்தோறும் குறைகிறது. அதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது'' என்றார்.
''எங்கே அதை நிரூபித்துக் காட்டுங்கள்'' என கேட்டார்.
''அரசரே! ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் சொல்லுங்கள். பின் உங்களைத் தவிர எல்லோரும் வெளியே செல்லட்டும்'' என்றார். அவர்களும் அவ்வாறே செய்தனர்.
பின் பாத்திரத்தில் இருந்து ஒரு சொட்டுத் தண்ணீரை தரையில் விட்ட வணிகர், வெளியே இருந்தவர்களை அழைத்தார்.
உள்ளே வந்தவர்களிடம், ''இதில் தண்ணீர் குறைந்து உள்ளதா?'' என்று கேட்டதற்கு, ''இல்லை'' என்றனர்.
''பார்த்தீர்களா... இதுபோல்தான் உங்கள் அழகும். தினமும் குறைந்து கொண்டே போகும். அது யார் கண்ணுக்கும் தெரியாது'' என்றார்.
'அழியும் அழகிற்காகவா நான் ஆணவம் கொண்டேன்' என நொந்து கொண்டார் அரசர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X