* சாப்பிடும் போது மற்றவர் அருகில் இருந்தால் அவருக்கும் கொடுத்து உண்ணுங்கள்.
* அன்பினால் செய்யும் செயலுக்கு அளவிட முடியாத ஆற்றல் உண்டு.
* நன்றி செலுத்தும் பண்பில்லாதவரிடம் பொறுமை இருக்காது.
* நாணம் என்னும் குணமுள்ளவர்கள் தீயசெயலுக்கு அஞ்சுவர்.
* இறைநம்பிக்கை உள்ளவர்களை வறுமை, நோய், துன்பம் ஒன்றும் செய்யாது.
* உயிர்கள் மீது இரக்கம் கொள்பவரிடம் இறைவன் பேரிரக்கம் கொள்கிறார்.
* பிறர் வேதனையில் இருக்கும் போது அவருக்கு ஆறுதலான வார்த்தை கூறுங்கள்.
* திறமையறிந்து கொடுக்கும் பொறுப்பு நுாறு சதவீதம் பயன் தரும்.
-பொன்மொழிகள்