* இக்கட்டான நேரத்தில் உங்களுக்கு உதவி செய்தவர்களை மறக்காதீர்கள்.
* நல்ல வீரனைப் போல கஷ்டங்களைக் தாங்கிக் கொள்ளுங்கள்.
* கோபத்தை வலியுறுத்தினால் சண்டை தான் பிறக்கும்.
* பொறாமை இருக்குமிடத்தில் சகல தீய செயல்களும் இருக்கும்.
* அசட்டுத்தனமான வீண் கேள்விகளைத் தவிர்த்து விடுங்கள்.
* கற்றுக்கொண்ட நல்ல விஷயங்களில் நிலைத்து நிற்பீர்களாக.
* கருணை உள்ளவர்கள் பாக்கியவான்கள்.
* பேசுவதில் மெதுவாகவும், கோபம் கொள்வதில் தாமதமாகவும் இருங்கள்.
* விதைப்பதற்கு ஒரு காலமும், விளைச்சலை பறிப்பதற்கு ஒரு காலமும் உண்டு.
* சோதனையை சகிக்கும் மனிதன் பாக்கியவான்; ஏனெனில் சோதனை முடிவில் கிரீடத்தைப் பெறுவான்.
* சோம்பேறியே... எறும்பின் உழைப்பைக் கவனி. அதற்கு வழிகாட்ட தலைவனும் இல்லை; அதிகாரியும் இல்லை.
-பொன்மொழிகள்