பள்ளிக்கூடத்தில் பாடம் நடத்திக்கொண்டிருந்தார் ஆசிரியர். அப்போது தெரு வழியாக வந்த யானையை பார்க்க மாணவர்கள் அனைவரும் எழுந்து சென்றனர். ஒருவன் மட்டும் வகுப்பறையிலேயே இருந்தான். அவனிடம் காரணம் கேட்டார்
ஆசிரியர். அதற்கு அவன் ''யானையை பார்க்க நான் பள்ளிக்கு வரவில்லை தாங்கள் சொல்லித்தரும் பாடங்களில் கவனம் செலுத்தவே வந்திருக்கிறேன்'' என்றான். அவனே பிற்காலத்தில் சிறந்து விளங்கிய ஸ்பெயின் நாட்டை சேர்ந்த யெஹ்யா என்பவர் ஆவார்.