அக்.28, ஐப்பசி 11: முகூர்த்த நாள். வாஸ்துநாள். மதுரை சோலைமலை முருகன் ஆட்டுக்கிடா வாகனம். சிக்கல் சிங்காரவேலவர் வேணுகோபல கோலத்தில் காட்சி. திருவட்டாறு எம்பெருமான் பவனி. ஸ்ரீ பெரும்புதுார் மணவாள மாமுனிகள் புறப்பாடு.
அக்.29, ஐப்பசி 12: ஐயடிகள் காடவர்கோன் குருபூஜை. மணவாளமாமுனிகள் திருநட்சத்திரம். திருநள்ளாறு சனீஸ்வரர் சிறப்பு வழிபாடு. திருச்சி வயலுார் முருகப்பெருமான் சிங்கமுகசூரனுக்கு பெருவாழ்வு தந்தருளல்.அஹோபில மடம் 11 வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம்.
அக்.30, ஐப்பசி 13: முகூர்த்த நாள். திருக்குறுக்கைபிரான், சேனைமுதலியார் திருநட்சத்திரம். கந்தசஷ்டி. சஷ்டிவிரதம். சகல சிவ, சுப்பிரமணியர் கோயில்களில் சூரசம்ஹாரம். முருகப்பெருமான் வீதி வலம் வருதல்
அக்.31 ஐப்பசி 14: சகல சிவ, சுப்பிரமணியர் கோயில்களில் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம். திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் ஊஞ்சல். உத்திரமாயூரம் வள்ளலார் சன்னதியில் சந்திரசேகரர் புறப்பாடு
நவ.1 ஐப்பசி 15: திருவோண விரதம். பொய்கையாழ்வார் திருநட்சத்திரம். ஸ்ரீபெரும்புதுார் லோகாசாரியார் தீர்த்தவாரி. திருவட்டாறு, திருவனந்தபுரம் இத்தலங்களில் எம்பெருமானுக்கு ஆராட்டு.
நவ.2, ஐப்பசி 16: பூதத்தாழ்வார் திருநட்சத்திரம், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சனம். திருப்பதி ஏழுமலையப்பன் சகஸ்ரகலசாபிஷேகம். சிக்கல் சிங்காரவேலவர் விடையாற்று உற்ஸவம்.
நவ.3, ஐப்பசி 17 பேயாழ்வார் திருநட்சத்திரம். சுவாமிமலைமுருகன் வைரவேல் தரிசனம்.திருப்பதி திருவேங்கடமுடையான் புஷ்பாங்கி சேவை. திருமாலிருஞ்சோலை கள்ளழகர் பெருமாள் ரக் ஷாபந்தனக்காட்சி.