தர்மத்தை அடிப்படையாகக் கொண்ட ஹிந்து மதத்தை 'சனாதன தர்மம்' (அழிவில்லாத அறம்) என்பர். அதன் பெருமையை உணராமல் மேலை நாட்டு வாழ்க்கை முறையை பின்பற்றி நம் பாரத பண்பாட்டை தொலைத்து விட்டோம். இனியாவது நம் மரபுகளை பின்பற்றி சனாதன தர்மம் காப்போம்.
தற்காலத்தில் நாம் செய்யும் தவறுகளை பட்டியல் இட்டால் இங்கே இடம் போதாது.
* தற்போது நாம் ஏன் கோயிலுக்குச் செல்கிறோம்... துன்பம் வந்தால் மட்டுமே கடவுளை நாடுகிறோம். கடவுள் நமக்கு கொடுத்திருக்கும் வாழ்க்கைக்கு நன்றி செலுத்த ஏன் தினமும் கோயிலுக்குச் செல்லக் கூடாது.
* கடவுளிடம் வரம் கேட்கும் போதோ அல்லது துன்பத்தில் வாடும் போதோ கோயிலுக்குச் செல்கிறோம். நன்றியுணர்வுடன் நாம் ஏன் தினமும் கோயிலுக்கு செல்லக் கூடாது?
* கோயிலுக்குச் செல்வதற்கான காரணத்தையும், அங்கு எப்படி வழிபட வேண்டும் என்பதையும் நம் முன்னோர்கள் சொல்லியுள்ளனர். அதை குழந்தைகளுக்கு கற்றுத் தருவது நம் கடமையல்லவா...
* குழந்தைகள் ஆங்கில கவிதை சொல்வதை விரும்புகிறோம். ஆனால் அவர்கள் ஆன்மிக ஸ்லோகம் அறிந்து கொள்ளாததைப் பற்றி துளியும் கவலைப்படவில்லையே...
* ராமாயணம், பகவத்கீதை, திருவாசகம் போன்ற ஆன்மிக நுால்களை குழந்தைகளுக்கு சொல்லித் தர தவறியது நியாயம்தானா...
* பெரியவர்களைக் கண்டால் வணக்கம் என குழந்தைகள் சொன்னதுண்டா... இல்லையே ஹலோ, ஹாய், டாடா, பைபை, ஸீயூ எனச் சொல்கிறார்கள். இது முறையா...
* தற்காலத்தில் ஆண்கள் திருநீறு, திருமண் அணிவதையும், பெண்கள் குங்குமம் இடுவதையும் மறந்து போனார்களே இது சரியா...
* இன்றைய தலைமுறை பெண்கள் வளையல், தாவணி, புடவை, தாலி அணிய வெட்கப்படுவதோடு தேவையற்றதாகவும் கருதுகிறார்களே... இது தர்மமாகுமா...
* காலை 6:00 மணிக்கு முன்பு எழும் பழக்கத்தை விட்டு விட்டோமே... வழிபாடு, யோகப்பயிற்சியை செய்ய தவறினோமே... ஒருநாளாவது சூரிய உதயத்தை பார்த்ததுண்டா... இதைப் பற்றி ஒருமுறையாவது யோசித்தோமா... இல்லையே
* அன்றாட வாழ்க்கையோடு ஆன்மிகத்தையும் இணைத்து வாழ்ந்த நம் முன்னோர்கள் அதிபுத்திசாலிகள். அவர்களின் வழிகாட்டுதல்களை பின்பற்றினாலே பாரத மண்ணில் தர்மம் தழைக்கும். இந்த சனாதன தர்மத்தை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கும் கொடுத்துச் செல்வது நம் கடமை.