* மகனுக்கு தந்தை கொடுக்கும் சிறந்த அன்பளிப்பு நல்லொழுக்கமும், நற்கல்வியும் மட்டுமே.
* நிதானம் என்பது இறைவனின் தன்மை, அவசரம் என்பது சைத்தானின் தன்மை.
* வாக்குறுதியை நிறைவேற்றாத ஒருவர் சொர்க்கம் செல்வதற்கு வாய்ப்பு இல்லை.
* அனாதைகளுக்கு செய்யும் உதவி ஆயுளை கூட்டும்.
* சகோதரரின் துன்பம் கண்டு இரங்குபவன் உயர்ந்தவன்.
* முன்னோர்களின் நல்ல செயல்களை மற்றவர்களுக்கு எடுத்துக்கூறுங்கள்.
* பொறாமை என்னும் தீ ஒருவரைச் சாம்பலாக்கி விடும்.
-பொன்மொழிகள்