* சனிப்பிரதோஷம் அன்று பைரவருக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து தயிர்சாதம் படைத்து வழிபடுபவர்களுக்கு வியாபாரம் செழிக்கும்.
* செவ்வாய் அன்று ராகுகாலத்தில் பைரவருக்கு செவ்வரளி மாலை சாற்றி வணங்கி வர சகோதர ஒற்றுமை பலப்படும்.
* புதன் அன்று பிரம்மமுகூர்த்த நேரத்தில் பைரவரை, பெற்றோர்கள் வணங்கி வர குழந்தைகளுக்கு கல்வித்திறன் மேம்படும்.
* வெள்ளி அன்று ராகுகாலத்தில் பைரவருக்கு சந்தக்காப்பு, வாசனை திரவியங்கள் சாற்றி வழிபட திருமணத்தடை விலகும்.
* திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் தாத்தையங்கார் பேட்டையில் காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. இங்குள்ள பஞ்சமுக பீஷண பைரவர் சப்தஸ்வர கல்லினால் உருவானவர்.
* தென்காசி மாவட்டம் குற்றாலத்திலுள்ள சித்திர சபையில் அஷ்ட பைரவரின் ஓவியங்கள் காணப்படுகின்றன.
* சென்னை திருவான்மியூர் திருத்தலத்தில் ஏழு பைரவர் சன்னதிகள் உள்ளன.
* தஞ்சை மாவட்டம் திருவிசலுார் சிவயோகநாதர் கோயிலில் சதுர் புஜ சதுர் பைரவர்கள் காட்சி தருகின்றனர்.