நவ.17 - நினைவு நாள்
* கடமைகளை சரியாக செய். அதுவே நீ கடவுளுக்கு செலுத்தும் சிறந்த காணிக்கை.
* வாழ்வில் நல்லதும், கெட்டதும் மாறி மாறி வரும்.
* வீணாக பொழுதை போக்காதே. வளர்ச்சிக்கான பணிகளில் ஈடுபடு.
* எதிலும் நேர்மையாக இரு. மகிழ்ச்சி என்னும் பரிசை கடவுள் உனக்கு தருவார்.
* பிறரை மாற்ற விரும்புகிறாயா... முதலில் நீ மாறு.
* அன்பு நடமாடும் கலைக்கூடமாக உன் மனதை வைத்துக்கொள்.
* எந்தவொரு விஷயத்தையும் அமைதியுடன் அணுகுவதே வலிமையின் அடையாளம்.
* எதிர்பார்ப்பு இல்லாத பக்தியே மேலான மகிழ்ச்சியைத் தரும்.
* ஒழுக்கம் என்பது உனது வளர்ச்சிக்கான ஒரு வழிமுறை. அதை உயிராக கருது.
* உண்மை, நேர்மை என்று மனதை துாய்மையாக வைத்திரு.
* பேசாமல் இரு. பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம்.
* தவறு செய்தால் அதை மறைக்காதே. உடனே மன்னிப்பு கேட்டுவிடு.
* உலகில் கீழான வேலை என்று எதுவும் இல்லை.
* எதற்காகவும் பயப்படாதே. எப்போதும் கடவுள் உன்னுடன் இருப்பார்.
* சாப்பிடும்முன், 'எல்லோருக்கும் உணவு கிடைக்க வேண்டும்' என கடவுளிடம் வேண்டிக்கொள்.
* எந்தவொரு உணர்ச்சியையும் அடக்காதே. அடக்கினால் அது முன்பைவிட பல மடங்கு கூடும். * வாழ்வில் முன்னேற வேண்டுமா... வளைந்து கொடுக்கும் பண்பை வளர்த்துக்கொள்.
சொல்கிறார் ஸ்ரீ அன்னை