நவ.11, ஐப்பசி 25: முகூர்த்த நாள், மாயவரம் கவுரிமாயூர நாத பூத வாகனம். சங்கரன் கோயில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் புறப்பாடு.
நவ.12, ஐப்பசி 26: சென்னை திருவள்ளூர், ஸ்ரீரங்கம் தலங்களில் எம்பெருமானுக்கு திருமஞ்சனம். பெரும்புதுார் மணவாள மாமுனிகள் புறப்பாடு. திருநள்ளாறு சனிபகவான் அபிேஷகம்.
நவ.13, ஐப்பசி 27 திருஇந்துளூர் பரிமளரங்கராஜர் யானை வாகனம். திருநெல்வேலி காந்திமதியம்மன் நெல்லையப்பர் தாமிரபரணி தீர்த்தத்தில் திருமஞ்சனம். உத்திரமாயூரம் சிவன் கோயிலில் பஞ்சமூர்த்தி புறப்பாடு.
நவ.14, ஐப்பசி 28: முகூர்த்த நாள், பத்ராசலம் ராமபிரான் புறப்பாடு. திருப்பதி கோவிந்தராஜப்பெருமாள் சன்னதியில் கருடாழ்வார் திருமஞ்சனம்.
நவ.15, ஐப்பசி 29: சோளிங்கபுரம் அமிர்தவல்லி தாயார் பக்தோசிதப்பெருமாள் திருக்கல்யாணம். திருமய்யம் சத்தியமூர்த்தி புறப்பாடு. குரங்கனி முத்துமாலையம்மன் பவனி. சக்தி நாயனார் குருபூஜை.
நவ.16, ஐப்பசி 30: கால பைரவாஷ்டமி. அனைத்துச் சிவன் கோயில்களில் பைரவ வழிபாடு. திருப்பதி திருவேங்கடமுடையான் சகஸ்ர கலசாபிஷேகம்.
நவ.17, கார்த்திகை 1: ஐயப்ப பக்தர்கள் மாலையணியும் விழா. மதுரை திருமாலிருஞ்சோலை கள்ளழகர் புறப்பாடு. சுவாமிமலை முருகப்பெருமான் தங்கப்பூமாலை சூடியருளல். கரிநாள்.