* செடி, கொடிகளுக்கு தண்ணீரும், விலங்குகளுக்கு உணவும் அளிப்பது சிறந்த தர்மம்.
* எந்த செயல் செய்தாலும் அதில் ஒழுங்கு இருக்க வேண்டும்.
* புகழுக்காக சமூக சேவையில் ஈடுபடுவது மோசடித்தனம்.
* வாழ்வில் ஒழுக்கம் இருந்தால், அது எல்லா விஷயத்திலும் பிரதிபலிக்கும்.
* தன் நலத்தோடு, பிறர் நலத்தையும் நாடுபவர் உத்தமன்.
* ஆசை வயப்பட்டு செய்யும் செயல்கள் மனிதனை பாவச் சேற்றில் தள்ளும்.
* மனம் துாய்மை அடையவும், பாவம் நீங்கவும் ஒரே வழி தியானத்தில் ஈடுபடுவது.
* அன்னதானம் செய்யுங்கள். மனிதன் திருப்தியாவான்.
* நிறைவேறாத ஆசைகளே தீய எண்ணங்களாக வெளிப்படுகின்றன.
* சேவை செய்பவர்களுக்கு சாந்த மனம் வேண்டும்.
* சொத்து தரும் சுகம் தற்காலிகமானது. அதை பிறருக்கு கொடுப்பது மகிழ்ச்சி.
* தன்னை யாரென்று வெளிப்படுத்தாமல், செயல்புரிவதே தொண்டிற்குரிய லட்சணம்.
* நல்ல எண்ணத்துடன் செய்யும் செயலுக்கு போட்டி, பொறாமை இருக்காது.
* மனிதப் பிறவி எடுத்ததே, பிறர் மீது அன்பு செலுத்துவதற்கு தான்.
* மற்றவர் குறைகளை அன்பால் திருத்துங்கள். அடக்குமுறை வேண்டாம்.
என்கிறார் காஞ்சி மஹாபெரியவர்