ஜன.12 - பிறந்த நாள்
* ஆக்கப்பூர்வமான செயலில் ஈடுபடு. அது வளமான எதிர்காலத்திற்கு அழைத்துச் செல்லும்.
* சாதனை புரியவே கடவுள் உன்னை படைத்திருக்கிறார்.
* உண்மையானவர்களும், அன்பானவர்களும் யாருக்கும் பயப்படத் தேவையில்லை.
* பிறருக்கு உதவி செய். அது நம்மை பண்படுத்த கடவுள் கொடுத்த வாய்ப்பு.
* நல்ல மனம் கொண்டவர்களே கடவுளை காணும் பாக்கியம் பெற்றவர்கள்.
* பூமி போல பொறுமை மிக்கவரை உலகம் மதிக்கும்.
* தாயும் தந்தையும் மகிழ்ச்சி அடைந்தால், கடவுளும் மகிழ்ச்சி அடைவார்.
* பிறர் ஏளனத்தைப் பொருட்படுத்தாமல், கடமையில் கண்ணாக இரு.
* தன்னம்பிக்கை ஒன்றே, நமக்குள் இருக்கும் தெய்வீகத்தை வரவழைக்கும்.
* சுயநலம் ஒழுக்கக்கேடு. சுயநலமின்மையே நல்லொழுக்கம்.
* முதலில் பணிவை கற்றுக்கொள். கட்டளையிடும் அதிகாரம் தானாகவே வரும்.
* உன்னை வலிமையானவன் என நீ நினைத்தால், உண்மையில் வலிமையானவனாக மாறுவாய்.
* பெற்றுக் கொள்வதில் பெருமையில்லை, கொடுப்பதே பெருமை.
* பரந்த நோக்குடன் செல்வது வாழ்க்கை. சுயநலமாக இருந்தால் அது மரணம்.
சொல்கிறார் விவேகானந்தர்