* பூமியைப்போல் பொறுமையாக இருங்கள்.
* தக்க சமயத்தில் சொன்ன வார்த்தை, வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட தங்கத்திற்கு சமம்.
* உங்களுக்கு ஒருவர் தீமை செய்தாலும், அவருக்கு நல்லதையே செய்யுங்கள்.
* பிறர் செய்வதற்கு முன், நல்லதை நீங்களே செய்யுங்கள்.
* கோபம் வந்தால் அதன்பின்னே அவமானமும் வரும்.
* நம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி பெறலாம்.
* வாழ்க்கை என்பது சற்று நேரம் தோன்றி மறைந்து போகும் புகை.
* நன்மை செய்ய அறிந்திருந்தும் அதைச் செய்யாமல் இருப்பது பாவம்.
* இரும்பை இரும்பு கூர்மையாக்கும். மனிதனை அவன் நண்பன் கூர்மையாக்குகிறான்.
* ஒன்றின் துவக்கத்தை விட அதன் முடிவு தான் சிறந்தது.
* நல்ல உள்ளம் கொண்டவரின் நட்பை மறவாதிருக்க வேண்டும்.
-பொன்மொழிகள்