* விநாயகரை வணங்கினால் அது மற்ற தெய்வங்களை வணங்கியதற்கு சமம்.
* கிரகணத்தின் போது கடனில் சிறு பகுதியை கொடுத்தால், கடன் விரைவில் தீரும்.
* வழிபாட்டின்போது உடைக்கும் தேங்காயில் பூ இருந்தால் வாழ்க்கை சுகமாக இருக்கும்.
* ஒரு தீபத்தில் இருந்து மற்றொரு தீபத்தை ஏற்றக்கூடாது.
* திங்கட்கிழமையன்று சிவபெருமானை வணங்குங்கள். அன்று அமாவாசை இருந்தால் இரட்டிப்பு சிறப்பு.
* விரதம் இருக்கும் நாளில் வெந்நீரில் குளிக்க வேண்டாம்.
* அமாவாசையன்று அன்னதானம் செய்தால் கூடுதல் புண்ணியம் கிடைக்கும்.
* தினமும் 108 முறை 'ஸ்ரீராமஜெயம்' எழுதுங்கள். உங்களுக்கு நல்லதே நடக்கும்.
* திருஞானசம்பந்தரின் கோளறு பதிகத்தை படியுங்கள். நவகிரகங்களால் ஏற்படும் பிரச்னைகள் தீரும்.
* தெய்வ மந்திரங்களை சொல்பவர்களுக்கு மட்டுமல்லாமல், அவர்களது சந்ததியினருக்கும் அந்த பலன் கிடைக்கும்.
* மனஅடக்கம், உண்மை ஆகியவற்றால் தர்மத்தை கடைப்பிடிப்பவர்கள் சொர்க்கத்தை அடைவர்.