சொந்த வீடு கட்டணுமா, வீட்டில் விளக்கேற்றி இந்த திருப்புகழ் பாடலை தொடர்ந்து பாடுங்கள். கட்டப்பட்டு பாதியில் நிற்கும் வீடு முழுமையாக முடியும். இப்பாடலில் மகிழ்கூர, மகிழ்வாக, மகிழ்கூற, மின்பமுற என நான்கு இடங்களில் 'மகிழ்ச்சி' என்ற வார்த்தையை பயன்படுத்தி இருப்பதால் இதை 'மகிழ்ச்சித் திருப்புகழ்' என அழைக்கின்றனர்.
இழந்த பொருட்களை திரும்ப பெற அனைவரும் சிரத்தையாக படிக்க வேண்டிய பாடல் இது. திருவண்ணாமலை தலத்தை நினைக்க முக்தி என்பர். அதைபோலவே திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சிறுவாபுரி முருகனை நினைத்தால் முக்தியை தருவார் என்பது அருணகிரிநாதர் வாக்கு.
அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற
அண்டர்மன மகிழ்மீற ... அருளாலே
அந்தரியொடு உடனாடு சங்கரனு மகிழ்கூர
ஐங்கரனும் உமையாளு ... மகிழ்வாக
மண்டலமு முநிவோரு மெண்டிசையி லுளபேரு
மஞ்சினனு மயனாரு ... மெதிர்காண
மங்கையுட னரிதானு மின்பமுற மகிழ்கூற
மைந்துமயி லுடனாடி ... வரவேணும்
புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாளா
புந்திநிறை யறிவாள ... வுயர்தோளா
பொங்குகட லுடனாகம் விண்டுவரை யிகல்சாடு
பொன்பரவு கதிர்வீசு ... வடிவேலா
தண்டரள மணிமார்ப செம்பொனெழில் செறிரூப
தண்டமிழின் மிகுநேய ... முருகேசா
சந்ததமு மடியார்கள் சிந்தையது குடியான
தண்சிறுவை தனில்மேவு ... பெருமாளே.