ஜன.20 தை 6: முகூர்த்த நாள். மாத சிவராத்திரி. மதுரை செல்லத்தம்மன் காலை சிம்மாசனம். சூரியனார் கோயில் சிவபெருமான் திருவீதிஉலா. திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகனம்.
ஜன.21 தை 7: அமாவாசை. திருநெல்வேலி, தென்காசி சிவன்கோயிலில் பத்ரதீபம். அஹோபில மடம் 42 வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம்.
ஜன.22 தை 8: அஹோபில மடம் 3 வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம். சாத்துார் வெங்கடேசப்பெருமாள் பவனி. ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய பெருமாள் புறப்பாடு. திருப்பரங்குன்றம் முருகனுக்கு உற்ஸவம் ஆரம்பம்.
ஜன.23 தை 9: முகூர்த்த நாள். சந்திர தரிசனம். திருவாவடுதுறை சிவபெருமான் பவனி. சங்கரன்கோவில் கோமதியம்பாள் புஷ்ப பாவாடை. திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் தேர். திருமொச்சியூர் சிவபெருமான் புறப்பாடு.
ஜன.24 தை 10: மதுரை மீனாட்சி சொக்கநாதர் தெப்ப உற்ஸவம் ஆரம்பம். கல்லிடைக்குறிச்சி சிவன் வீதி உலா. சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சனம். அப்பூதியடிகள் குருபூஜை.
ஜன.25 தை 11: சதுர்த்தி விரதம். அஹோபில மடம் 6 வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம். மிலட்டூர் விநாயகர், தேரெழுந்துார் ஞானசம்பந்தர் புறப்பாடு. கரிநாள்.
ஜன.26 தை 12: முகூர்த்த நாள். திருப்பதி ஏழுமலையப்பன் மைசூர் மண்டபத்திற்கு எழுந்தருளல். சுவாமிமலை முருகப்பெருமான் வைரவேல் தரிசனம். ஹரதத்த சிவாச்சாரியார் குருபூஜை. கிணறு, மனை, மடம், வாஸ்து செய்ய நன்று.