கேளுங்க சொல்கிறோம்
ஜனவரி 31,2023,10:42  IST

க.அர்ச்சுனன், செங்கல்பட்டு.
*வாசலில் சங்கு பதிப்பது ஏன்?
திருஷ்டியை தடுக்கும் சக்தி கொண்டது என்பதால் சங்கினை பதிக்கிறோம்.

த. நேரு, வெண்கரும்பூர், கடலுார்.
*திருமணத்தன்று அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது எதற்காக?
கற்பு நெறியுடன் வாழ்ந்து வானில் நட்சத்திரமாக திகழ்பவர்கள் அருந்ததி, வசிஷ்டர் தம்பதியினர். இவர்களைப் போல ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதற்காக.

ஜீ.நீலமேகம், உத்தமபாளையம், தேனி.
*போற்றி, சரணம், வாழ்க - இதில் எது சிறப்பானது?
வாழ்க, போற்றி, சரணம் என சிவபெருமானை பலவிதமாக போற்றுகின்றனர். மூன்றுமே சிறப்பானது.

அ.ரவீந்திரன், மணிகெட்டி பொட்டல், கன்னியாகுமரி.
*குழந்தைக்கு எத்தனை வயது வரை நெற்றியில் கறுப்பு பொட்டை வைக்கலாம்?
திருஷ்டி, கிரக தோஷத்தில் இருந்து பாதுகாக்க ஒரு வயது வரை வைப்பது அவசியம். ஆயுள் முழுவதும் பெண் குழந்தைகள் வைக்கலாம்.

அ.முரளிதரன், பெங்களுரு.
*வாசல் தெளிக்கும் போது, மஞ்சள் தண்ணீர் தெளிப்பது ஏன்?
கிருமி நாசினியான மஞ்சள் கலந்த நீரை தெளித்தால் நோய்கள் வராது. அதோடு மகாலட்சுமியின் அருளும் கிடைக்கும்.

இ.நாகராஜன், சாத்துார், விருதுநகர்.
*கோயிலில் என்னென்ன சுபநிகழ்ச்சிகளை நடத்தலாம்?
திருமணம், நட்சத்திர பிறந்த நாளன்று ஆயுள்ேஹாமத்தை நடத்தலாம். 50, 60, 80 வயதில் நடத்தும் திருமணத்தை நடத்துவது விசஷேம்.

வி.வினித், பாபநாசம், திருநெல்வேலி.
*ஊழ்வினை உறுத்து வந்துாட்டும் என்பதன் பொருள்
நாம் முற்பிறவியில் செய்த செயல்களை ஊழ்வினை என்கிறோம். இது நம்மை விடாமல் துரத்தும். மனிதனாக மண்ணில் பிறப்பதும், ஏற்றத்தாழ்வுடன் வாழ்வதும் ஊழ்வினையால்தான்.

எஸ்.கஸ்துாரி, கோயம்புத்துார்.
*ஏழைகளின் கற்பக மரம் எது?
ஏழைகளின் கற்பக மரம் தென்னை. இதை வளர்ப்பவர் பணக்காரராக மாறுவார்.

எஸ்.ராஜேந்திரன், தமிழர்என்கிலேவ், டில்லி.
*கனவு தொல்லையால் சிரமப்படுகிறேன். என்ன செய்யலாம்?
நெற்றியில் திருநீறு அல்லது திருமண் இட்டு தெய்வ சிந்தனையுடன் உறங்கச் செல்லுங்கள்.

எல்.கந்தரூபி, திருவேற்காடு, திருவள்ளூர்.
*லலிதா சகஸ்ர நாமத்தின் சிறப்பு என்ன?
லலிதாம்பிகையின் கருணையை விளக்கும்
நுால். பாஸ்கர ராயர் என்பவர் இதற்கு உரையெழுதி திருவாரூர் மாவட்டம் திருமீயச்சூர் கோயிலில் சமர்ப்பித்த போது, அம்பிகை தோன்றினாள். இதை படிப்பவர்கள் குறையின்றி வாழ்வர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X