* நவக்கிரகத்தால் ஏற்படும் புத்திர தோஷ பரிகாரத்தை சனிக்கிழமையில் செய்வது சிறப்பு.
* பெருமாள் கோயிலில் முதலில் தாயாரை வணங்கிய பிறகே, பெருமாளை வணங்க வேண்டும்.
* பெரியவர்களுக்கு விபூதியை வயதில் சிறியவர் பூசக்கூடாது.
* நியாயமான வழியில் வாழ்க்கையை நடத்துபவருக்கு, வழியில் நடக்கின்ற பிராணிகள் கூட உதவும்.
* சூரிய உதயம், அஸ்தமன காலம் நல்ல நேரமாகும். இந்த நேரத்தில் நல்ல பணியை தொடங்கினால் வெற்றிகரமாக முடியும்.
* துாய்மையான நிலையில் கடவுளின் நாமத்தை சொன்னால், நினைத்த செயல் நிறைவேறும்.
* கடைசிக்காலத்தில் எதை நினைக்கிறோமோ அந்த நினைப்பே அடுத்த பிறவியாக வரும். எனவே நல்லதை நினையுங்கள்.
* நம்மை நாமே சுற்றிக்கொண்டு சூரியபகவானை வணங்கலாம். இதுபோல் மற்ற தெய்வங்களை வணங்கக் கூடாது.