ஒற்றுமையாக இருக்கும் இருவீட்டார்கள் திடீர் என முகம் கொடுத்து கூட பேசமாட்டார்கள். அவ்வீட்டு பெண்களும் காரணமில்லாமல் சண்டை இட்டுக் கொள்வர். இதற்கு காரணம் இருவரில் ஒருவர் வெளிநாட்டில் பணி புரிந்து நல்ல நிலையில் இருப்பார். அது பிடிக்காத மற்றொருவரே காழ்ப்புணர்வு காரணமாக அவ்வாறு செய்வார். அவர்களுக்காகத்தான் யார் மீதும் பொறாமை வேண்டாம் என்கிறார் நபிகள் நாயகம்.