ஜனவரி 27, தை 13: முகூர்த்த நாள், சஷ்டி விரதம், கலிக்கம்ப நாயனார் குருபூஜை, மதுரை மீனாட்சி சொக்கநாதர் வெள்ளி சிம்மாசனம். சூரியனார் கோயிலில் சிவபெருமான் புறப்பாடு.
ஜனவரி 28, தை 14: ரத சப்தமி, நமச்சிவாய மூர்த்திகள் குருபூஜை, திருப்புடைமருதுார் சிவபெருமான் கற்பக விருட்ஷம். திருப்பரங்குன்றம் முருகன் ரத்ன சிம்மாசனம். பைம்பொழில் முருகன் பவனி.
ஜனவரி 29, தை 15: பீஷ்மாஷ்டமி, வைத்தீஸ்வரன் கோயில் செல்வமுத்துக்குமார சுவாமிக்கு திருவிழா ஆரம்பம். குன்றக்குடி முருகன் வெள்ளி கேடயத்தில் பவனி. கோயம்புத்துார் பாலதண்டாயுதபாணி கோயில் உற்ஸவம் ஆரம்பம். காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கருட வாகனம்.
ஜனவரி 30, தை 16: கார்த்திகை விரதம். பழநி தண்டபாணிக்கு உற்ஸவம். திருநெல்வேலி நெல்லையப்பர் சுவாமி நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல். திருச்சேறை பரமபதநாதர்
சஷே வாகனம்.
ஜனவரி 31, தை 17: திருப்பரங்குன்றம் முருகன் தெப்பம். வைத்தீஸ்வரன் கோயில், குன்றக்குடி, மருதமலை, கழுகுமலை தலங்களில் முருகன் புறப்பாடு. கரிநாள்.
பிப்ரவரி 1, தை 18 : முகூர்த்த நாள், கண்ணப்ப நாயனார் குருபூஜை, மதுரை மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் சப்தாவர்ணம். திருப்புடைமருதுார் சிவபெருமான் குதிரை வாகனம்.
பிப்ரவரி 2, தை 19: திருவாதிரை, வராஹ துவாதசி. மருதமலை, பைம்பொழில் தலங்களில் முருகப்பெருமான் பவனி. காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் தேர். அறிவாட்டாய நாயனார் குருபூஜை.